Jul 13, 2024
By: Nonnewsdesk Nonnewsdeskதற்போதைய காலக்கட்டத்தில் குழந்தை உறங்கும் தொட்டிலும் நவீனமாகி விட்டது. ஆனால் அந்த காலத்தில் பிறந்த குழந்தைகளை தாயின் சேலையில் தொட்டில் கட்டி தூங்க வைப்பார்கள். அதன் காரணங்கள் மற்றும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
Image Source: instagram
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது பனிக்குடத்தில் இருக்கும் நீரில் நீந்தியபடி தாய் அசையும் போதும், நடக்கும் போதும் ஊஞ்சல் ஆடுவது போன்ற ஓர் உணர்விற்கு பழக்கமாகி விடுகிறது. அந்த இருட்டு மற்றும் கதகதப்பு குழந்தைக்கு ஓர் பாதுகாப்பு உணர்வினை கொடுக்கும் என்று அறிவியல் கூறுகிறது.
Image Source: instagram
இந்த உணர்வு குழந்தைகளுக்கு கொடுக்க தான் தாயின் சேலையில் தொட்டில் கட்டி குழந்தைகளை தூங்க வைக்கிறோம். தொட்டில் அசையும் போது குழந்தை தனது தாயின் கருவறையில் இருப்பதாக உணர்ந்து ஆழ்ந்த தூக்கம் கொள்கிறது. பாதியில் விழித்தாலும் தொட்டில் ஆட்டப்பட்டால் தொல்லையின்றி தனது தூக்கத்தினை தொடருகிறது.
Image Source: instagram
இந்த பாரம்பரிய துணி தொட்டில் தான் குழந்தைகளுக்கு நல்லது என்று பிசியோதெரபி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இன்று பலரும் தொட்டில் கட்ட சோம்பல் கொண்டு நவீன தொட்டில்களை கடைகளில் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
Image Source: Samayam Tamil
நவீன தொட்டில்களை பயன்படுத்துவதால் குழந்தைகளின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாம்.
Image Source: pixabay
அதுவே நாம் குழந்தைகளை துணியால் கட்டப்பட்ட தொட்டிலில் போட்டு தூங்க வைத்தால் அதற்கு ஜீரண கோளாறுகள், வயிறு வலி நீங்கும், முதுகு தண்டு வலுப்பெறும், குழந்தைக்கு கழுத்து வலி ஏற்படாது என்று கூறுகிறார்கள்.
Image Source: pexels
மேலும் புதிதாக பிறந்த குழந்தைக்கு தாயின் அரவணைப்பு மிகவும் அவசியம். அதனால் தாயின் சேலையில் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டினால் தாய் தன்னுடன் இருப்பதாக குழந்தை உணர முடியும்.
Image Source: pexels
இந்த துணி தொட்டிலின் மகத்துவம் அறிந்த வெளிநாட்டினர் தற்போது இந்த தொட்டிலை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: pexels
தற்போதைய பெற்றோர்கள் குழந்தையின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி வீட்டிலுள்ள பெரியவர்களிடம் துணி தொட்டில் கட்டி தர சொல்லி அதில் குழந்தைகளை தூங்க வைப்பது தான் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
Image Source: pexels
Thanks For Reading!