Aug 18, 2024
பாலூட்டும் மசாஜ் என்பது பிரசவத்திற்கு பிறகு செய்யப்படுகிறது. பெண்கள் இந்த மசாஜ்களை செய்யும் போது மார்பகங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க முடியும்.
Image Source: pexels-com
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை என 30 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் தாய்ப்பாலில் சோடியம் அளவு குறைந்து லிப்பிடுகள், திடப்பொருட்கள் போன்ற சத்துக்கள் அதிகமாகும்.
Image Source: istock
தாய்மார்கள் மசாஜ் செய்யும் போது மார்பக வலி குறைகிறது. தினசரி பாலூட்டும் போது குழாய்களில் அடைப்பு மற்றும் மார்பகங்களில் கடினத் தன்மை ஏற்படலாம். மசாஜ் செய்யும் போது அடைப்பட்ட குழாயின் வலியை குறைக்கிறது.
Image Source: istock
பால் கொடுக்கும் தாய்மார்கள் மார்பகங்களை மசாஜ் செய்யும் போது பால் குழாய்களில் உள்ள அடைப்பை வெளியேற்ற முடியும். அதிக பால் உற்பத்தியை தூண்ட முடியும். இதனால் ஆக்ஸிடாஸின் ஹார்மோன் சுரந்து பால் குழாய் தசைகளை தளர்த்த உதவுகிறது.
Image Source: istock
மார்பகங்களை மசாஜ் செய்யும் போது மார்பகங்கள் மென்மைத் தன்மையை அடைகிறது. இதனால் குழந்தை முலைக்காம்பை பிடிப்பது எளிதாகிறது.
Image Source: istock
தாய்ப்பாலூட்டுவதால் மார்பகங்கள் பெரிதாக வாய்ப்பு உள்ளது. இதனால் மார்பகங்கள் தொய்வு ஏற்படலாம். ஆலிவ், தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய்களை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
Image Source: istock
முதலில் உங்கள் கைகளை சூடாக்க வேண்டும். சூடான துண்டை பயன்படுத்தி உங்கள் கைகளை சூடுபடுத்துங்கள். உங்கள் கைகள் சூடானதும் அக்குள் பகுதியில் இருந்து மார்பகங்கள் வரை மசாஜ் செய்யுங்கள்.
Image Source: istock
தேங்காயெண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை கைகளில் எடுத்து மார்பகங்களில் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள்
Image Source: istock
மார்பகங்களை கடினமாக அழுத்த வேண்டாம். இது சுரப்பி திசுக்களை பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. எனவே மென்மையான மசாஜ்யை மேற்கொள்ளுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!