Jun 25, 2024
By: mukesh Mஉங்கள் குழந்தைக்கு திட உணவுகளை உண்ணக் கொடுக்கும் போது அவை சத்தானவை மற்றும் பாதுகாப்பானவை ஆக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாய்ப்பாலை குறைத்து திட உணவுகளை எப்படி கொடுக்கலாம் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Image Source: istock
ஒவ்வொரு தாய்மார்களின் மனதிலும் எழும் மிகப்பெரிய கேள்வி இது. பொதுவாக ஆறு மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது என கூறப்படுகிறது. குறைமாத குழந்தைகளுக்கு சிறிது மாதம் அதிகமாக கொடுக்கலாம்.
Image Source: istock
பத்து மாத காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை குறைத்து அதில் உள்ள அதே அளவு ஊட்டச்சத்துக்களை திட உணவுகளில் கொடுக்க தயாராக வேண்டும். உங்கள் குழந்தையின் செரிமான அமைப்பு போன்றவற்றை தெரிந்து கொண்டு உணவின் அளவுகளை தேர்வு செய்ய வேண்டும்.
Image Source: istock
குழந்தைகளின் திட உணவுகளை பால் பாட்டிலில் கொடுக்கக் கூடாது. அவர்களை உட்கார வைத்து உணவு கொடுக்க வேண்டும். படுக்க வைத்து கொடுக்கக் கூடாது. பால், இறைச்சி போன்ற உணவுகளை ஒரு வயதுக்கு மேல் கொடுக்க வேண்டும்.
Image Source: pexels-com
உங்கள் குழந்தையின் உணவுகளில் 10 மாதத்திற்கு பிறகு பழங்களை சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இதில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. நல்ல பழுத்த மற்றும் சுவையான பழங்களை கொடுக்கவும்.
Image Source: istock
குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் ஒரு உணவாக ஃப்ரூட் ஜூஸ்சை கருத்தில் கொள்ளலாம். வீட்டிலேயே தயாரிக்கப்படும் பழச்சாறுகள் மிகவும் ஆரோக்கியமானவை. கடைகளில் வாங்கி கொடுப்பதை தவிர்க்கவும்.
Image Source: istock
உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து உங்கள் குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எளிதில் ஜீரணமாக கூடிய காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். தரமான, நச்சுக்கள் சேர்க்கப்படாத காய்கறிகளை தேர்ந்தெடுத்து கொடுக்கவும்.
Image Source: istock
10 மாதத்திற்கு பிறகான குழந்தைகளுக்கு புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பருப்புகளை நன்கு வேக வைத்து மசித்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
Image Source: istock
உங்கள் குழந்தை திட உணவை உண்ணத் தொடங்கியவுடன் தாய்ப்பாலின் அளவு குறைய தொடங்குகிறது. இதனால் நீர் சத்து குறைபாடுகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம். எனவே குழந்தைகளுக்கு தினசரி தேவையான அளவு தண்ணீர் கொடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Image Source: istock
Thanks For Reading!