May 9, 2024
செலரி ஜூஸில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. ஆனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்கள் செலரி ஜூஸ் குடிக்கலாமா என்று கேள்வி நம்மில் பலருக்கும் உண்டு.
Image Source: pexels-com
செலரி இலைகளை நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இதனை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைக்கவும். இதை நன்கு அரைத்தவுடன் வடிகட்டி குடித்து வரலாம்.
Image Source: istock
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஒரு சிறந்த பானம் இந்த செலரி ஜூஸ். இது தாய்மார்களுக்கு மட்டுமல்லாமல் தாய்ப்பாலின் மூலம் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது
Image Source: istock
இந்த செலரி ஜூஸில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது நம் உடலை நீரேற்றுடன் வைத்திருக்க உதவும். அதே போல குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த ஜூஸ் உதவும்.
Image Source: istock
இந்த செலரி ஜூஸில் இயற்கையாகவே சர்க்கரை அளவு குறைவாக உள்ளது. இதனால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ரத்த சர்க்கரை அளவை பற்றி கவலைப்படாமல் தாராளமாக இந்த செலரி ஜூசை கொடுத்து வரலாம்.
Image Source: istock
செலரி ஜூஸ் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது வீக்கம், அசௌகரியம், உடல் சோர்வு போன்ற உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்.
Image Source: istock
செலரியில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் மலச்சிக்கல் அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த பானம்.
Image Source: istock
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த செலரி ஜூஸ் குடித்து வந்தால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இதனால் அவர்கள் உடலில் தோல் வெடிப்புகள், அரிப்பு, வீக்கம் போன்றவை ஏற்படும்.
Image Source: istock
குடல் சார்ந்த பிரச்சனை உள்ள தாய்மார்கள் இந்த செலரி ஜூசை குடித்து வந்தால் குடல் வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம்.
Image Source: istock
Thanks For Reading!