May 28, 2024
By: mukesh Mபொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சோர்வாக காணப்படுவார்கள். தாய்ப்பால் கொடுக்கும் போது உண்டாகும் இந்த சோர்வுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? இதன் பின் விளைவுகள் என்ன? என்பது குறித்து விரிவாக இங்கு காணலாம்!
Image Source: pexels-com
குழந்தை இரவு நேரங்களில் அடிக்கடி பால் குடிப்பதால் உங்களது சீரான தூக்கம் பாதிக்கப்படுகிறது. உடலுக்கு தேவையான ஓய்வு மற்றும் தூக்கம் கிடைக்காமல் இருப்பதால் ஒருவித சோர்வு ஏற்படலாம்.
Image Source: istock
இரவு நேரங்களில் பால் கொடுப்பது, குழந்தை பால் குடிப்பதால் முளைக்காம்புகளில் ஏற்படும் வலி, குழந்தையை பராமரித்தல் போன்று இரவு நேரங்களில் பல வேலைகளை செய்ய வேண்டி இருப்பதால் தூக்கத்தில் இடையூறு ஏற்பட்டு சோர்வு ஏற்படலாம்.
Image Source: istock
குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தூக்கம் குறைவாக இருப்பதால் உங்களது தூக்கமும் பாதிக்கப்படுகிறது. குழந்தை அடிக்கடி பால் குடிப்பதால் உங்கள் உடலானது ஆற்றலை இழப்பதால் சோர்வு ஏற்படுகிறது.
Image Source: istock
மார்பகத் தொற்று பாதிப்புகள் ஏற்படும் போது அது கடுமையான சோர்வுக்கு வழிவகுக்கிறது. மார்பக திசுக்கள் கிருமிகளால் பாதிக்கப்படும்போது இது போன்ற தொற்றுகள் ஏற்படுகிறது. மார்பகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது இது போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவும்.
Image Source: istock
பிரசவத்திற்கு பிறகு தைராய்டு பிரச்சினைகள் ஏற்படுவதால் அது தாய்மார்களின் தூக்கத்தை பெரிதும் பாதிக்கிறது. தொடர்ந்து தூக்கமின்மை பிரச்சனை அதீத சோர்வுக்கு வழிவகுக்கிறது.
Image Source: istock
தாய்ப்பால் கொடுக்கும் போது உடல் சோர்வை சரி செய்ய உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற வேண்டும். இதற்கு ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
Image Source: istock
நமது உடல் ஆற்றலை பெற புரதச்சத்து மிகவும் அவசியம். புரதச்சத்து நிறைந்த உணவுகளில் இயற்கையாகவே ஆற்றலை அதிகரிக்கும் தன்மை உள்ளது. உங்கள் உணவில் பால், சீஸ், நட்ஸ், மீன், பருப்பு வகைகள் போன்றவற்றை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்.
Image Source: istock
நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ளும் போது சோர்வு நீங்கி உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். எனவே, நார்ச்சத்து நிறைந்த கொட்டைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்!
Image Source: istock
Thanks For Reading!