[ad_1] தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தைக்கு வியர்ப்பது இயல்பான ஒன்றா?

Aug 18, 2024

தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தைக்கு வியர்ப்பது இயல்பான ஒன்றா?

Suganthi

தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தைக்கு வியர்க்க காரணம்?

சில குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது வியர்க்க ஆரம்பிக்கும். குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகரிப்பால் இத்தகைய பிரச்சினை ஏற்படுகிறது. தோலில் உள்ள சிறிய குழாய் அமைப்பு தான் வியர்வையை உற்பத்தி செய்து உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

Image Source: pexels-com

தோலுடன் தோல் தொடர்பு

தாய்ப்பாலூட்டும் போது குழந்தையின் உடலானது தாயுடன் தொடர்பு கொள்கிறது. இதனா‌ல் தாய்க்கும் குழந்தைக்கும் வெப்ப பரிமாற்றம் ஏற்பட்டு குழந்தைக்கு வியர்க்க ஆரம்பிக்கலாம்.

Image Source: istock

அறையின் வெப்பநிலை

அறையின் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது குழந்தைக்கு அசெளகரியம் மற்றும் அதிக வெப்பம் ஏற்பட்டு குழந்தைக்கு வியர்க்க வாய்ப்பு உள்ளது.

Image Source: istock

போர்வையால் மூடுதல்

குழந்தையின் உடல் வெப்பநிலையை பராமரிக்க பெற்றோர்கள் குழந்தையை போர்வையால் மூடுகின்றனர். இப்படி கனமான போர்வையால் மூடும் போது உடல் வெப்பநிலை அதிகமாகி குழந்தைக்கு வியர்க்க ஆரம்பிக்கலாம்.

Image Source: istock

உடைகள்

சிலர் குழந்தைக்கு உடல் சூட்டை அதிகரிக்கும் ஆடைகளை அணிந்து விடுகின்றனர். தலைக்கு தொப்பி போடுவது மற்றும் சூட்டை கிளப்பும் ஆடைகளால் குழந்தைகளுக்கு வியர்க்க ஆரம்பிக்கலாம்.

Image Source: istock

அதே நிலையில் வைத்திருப்பது

குழந்தையை நீண்ட நேரம் அதே நிலையில் வைத்திருப்பதால் குழந்தையின் ஒரு பகுதியில் வெப்பம் அதிகமாகி வியர்வை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவ்வப்போது குழந்தையின் நிலையை மாற்றி வையுங்கள்.

Image Source: istock

தலை வியர்த்தல்

குழந்தையின் வியர்வை சுரப்பிகள் பெரும்பாலும் நெற்றியில் மற்றும் உச்சந்தலையில் மட்டுமே குவிந்து காணப்படும். இதனால் தலைப் பகுதியில் அதிக வியர்வை ஏற்படுகிறது.

Image Source: istock

மருத்துவரை அணுகுதல்

குழந்தைகள் மிக சீக்கிரமாக சோர்வடைந்தாலோ அல்லது உணவைத் தொடங்கிய உடனேயே தூங்கினாலோ அல்லது உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

Image Source: istock

தடுக்கும் முறைகள்

குழந்தைக்கு பாலூட்டும் போது தளர்வான ஆடைகளை அணியுங்கள், அறை வெப்பநிலையை சரியாக வையுங்கள். பருத்தியால் ஆன ஆடைகளை அணியுங்கள். தொப்பிகள் மற்றும் கையுறைகளை பயன்படுத்தாதீர்கள்.

Image Source: istock

Thanks For Reading!

Next: குழந்தைகள் வீட்டு வேலை செய்வதால் அவர்கள் பின்னாளில் சிறந்த வெற்றியாளராக மாறுவார்களாம்!

[ad_2]