Jul 10, 2024
இந்தியர்களின் உணவு வழக்கத்தில் இஞ்சிக்கு பெரும் பங்கு உண்டு. இஞ்சியில் சுவை மட்டுமல்லாது மருத்துவ குணங்களும் அதிக அளவில் உள்ளது. ஆரோக்கிய குணங்கள் பல நிறைந்த இந்த இஞ்சியை தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் உட்கொள்ளலாமா? கூடாதா? என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி பிரசவத்திற்கு பிறகான காயங்களை குணமாக்க இஞ்சி உதவுகிறது. மேலும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் இது உதவுகிறது. எனவே, தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தாராளமாக இஞ்சியை உணவில் (அளவாக) சேர்த்துக் கொள்ளலாம்.
Image Source: istock
தாய்மார்கள் உண்ணும் உணவு தாய்ப்பால் வடிவில் குழந்தைக்கு போய் சேர்கிறது. எனவே ஆரம்பத்தில் தாய்ப்பாலில் உள்ள சுவையின் மாற்றம் குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்; ஒவ்வாமைக்கான வாய்ப்புகள் குறைவு தான்!
Image Source: istock
இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் தாய்ப்பால் வடிவில் குழந்தைக்கு போய் சேர்வதால் இது மிகவும் பாதுகாப்பானது. அதாவது, இஞ்சியை அளவாக உட்கொள்ளும் போது குழந்தைக்கு எந்தவித பாதிப்புகளையும் இது ஏற்படுத்துவதில்லை.
Image Source: istock
கர்ப்பிணிகளும் இஞ்சியை தங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் - வாந்தி பிரச்சனையை சரி செய்ய இந்த இஞ்சி உதவியாக இருக்கும்.
Image Source: istock
இஞ்சியில் உள்ள குணங்கள் வாயு, வீக்கம், செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. பெரும்பாலும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் அல்லது கர்ப்பிணி பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருப்பது சகஜம். இவர்கள் இஞ்சியை எடுத்துக்கொள்ள நல்ல பலன் காணலாம்!
Image Source: istock
இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இரத்த நாளங்களில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இது உதவுகிறது.
Image Source: pexels-com
நீங்கள் அருந்தும் தேநீரில் சிறிதளவு இஞ்சி இடித்து கொதிக்க வைத்து தினசரி குடிக்கலாம். இதன் மூலம் இஞ்சியில் உள்ள அனைத்து பண்புகளும் நமக்கு ஊட்டச்சத்துக்களாக கிடைக்கிறது.
Image Source: istock
இஞ்சி உட்கொண்ட பிறகு தாய்ப்பால் குடித்தவுடன் குழந்தைகள் ஒவ்வாமை அறிகுறிகளை வெளிப்படுத்தினால் இஞ்சியின் நுகர்வை தவிர்க்கவும். அளவுக்கு அதிகமாக இஞ்சி உட்கொள்ளும் போது இது போன்ற ஒவ்வாமை விளைவுகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Image Source: istock
Thanks For Reading!