[ad_1] தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகள் ஏன் தூங்குகிறார்கள் தெரியுமா?

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகள் ஏன் தூங்குகிறார்கள் தெரியுமா?

Aug 20, 2024

By: Suganthi

தூங்குவதற்கான காரணம்

பெரும்பாலான குழந்தைகள் தாய்ப்பால் கொடுக்கும் போதே தூங்கி விடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் கோலிசிஸ்டோகினின் எனப்படும் ஹார்மோனின் அதிகரிப்பு குழந்தைகளில் திருப்தி உணர்வைக் கட்டுப்படுத்தி தூக்கத்தை வரவழைத்து விடுகிறது.

Image Source: istock

ஊட்டச்சத்து குறைபாடு

இப்படி குழந்தைகள் பால் குடிக்கும் போதே சீக்கிரமாக தூங்கி விடுவதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. போதுமான எடை அதிகரிப்பு ஏற்படுவதில்லை.

Image Source: istock

கருத்தில் கொள்ள வேண்டியவை

குழந்தை தூங்கிய பிறகு, குழந்தையின் நரம்பு மண்டலம் உறிஞ்சும் அனிச்சையை நிறுத்துகிறது. குழந்தை உறிஞ்சும் போது மட்டுமே பால் சுரக்கும். இது பால் லெட்டவுன் ரிஃப்ளெக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

Image Source: pexels-com

பழக்கமாக மாறிவிடும்

பாலூட்டும் போது குழந்தை தூங்குவது சரியா என்று யோசிக்க வேண்டும். ஏனெனில் காலப்போக்கில் பாலூட்டும் போது குழந்தை தூங்குவது ஒரு பழக்கமாக மாற வாய்ப்பு உள்ளது.

Image Source: istock

முதுகில் தடவி விடுங்கள்

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தூங்கினால் குழந்தையின் முதுகு அல்லது முகத்தை தேய்க்கலாம் அல்லது தட்டலாம். இதனால் அவர்களின் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு தூக்க கலைப்பு நீங்கும்.

Image Source: istock

குழந்தையுடன் தொடர்ந்து பேசுங்கள்

பாலூட்டும் போது குழந்தையுடன் தொடர்ந்து பேசிக் கொண்டே பாலூட்டலாம். இதனால் குழந்தை சீக்கிரம் தூங்காமல் பாலை குடிக்கும். குழந்தையின் வயிற்றுப் பசியும் முழுமையடையும்.

Image Source: istock

வெளிச்சமான அறை

குழந்தைக்கு நன்கு வெளிச்சமான அறையில் தாய்ப்பால் ஊட்டுங்கள். இதன் மூலம் குழந்தை சீக்கிரமாக தூங்குவது தடுக்கப்படும்.

Image Source: istock

படுத்திருக்கும் நிலையில் பாலூட்ட வேண்டாம்

குழந்தைக்கு உணவளிக்கும் போது அமர்ந்து கொண்டு பாலூட்டுங்கள். நீங்கள் படுத்திக் கொண்டே பாலூட்டும் போது குழந்தை சீக்கிரம் தூங்கி விட வாய்ப்பு உள்ளது.

Image Source: istock

மார்பகங்களை மாற்றி பாலூட்டுங்கள்

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை உடனே தூங்குவதை தடுக்க மார்பகங்களை மாற்றி பாலூட்டலாம். இதன் மூலம் குழந்தை தூங்குவது தடுக்கப்படும்.

Image Source: istock

Thanks For Reading!

Next: அதிகாலை 3 மணிக்கு விழிப்பு வர இது தான் காரணம்

[ad_2]