[ad_1] தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

Aug 21, 2024

By: Suganthi

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது

சில பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு உடல் எடையானது அதிகரிக்கும். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு பெண்களின் உடல் எடை, உடல் அமைப்பு மற்றும் ஆற்றலை பயன்படுத்துவது மாறுகிறது.

Image Source: pexels-com

எடை அதிகரிக்க காரணங்கள்

தாய்ப்பால் கொடுக்கும் போது உங்களுக்கு பசி அதிகமாக இருக்கும். இதனா‌ல் நீங்கள் நிறையளவில் உணவு எடுத்துக் கொள்வீர்கள். திடீரென தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் போதும் அதே அளவு உணவு எடுக்கும் போது உங்கள் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Image Source: istock

கலோரிகள் எரிக்கப்படுகிறது

தாய்ப்பால் ஊட்டும் போது உடலானது கூடுதல் கலோரிகளை பாலை உற்பத்தி செய்ய எரிக்கிறது. வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் 2.7 சதவீதம் எடை குறைகிறது என்று ஆய்வு கூறுகிறது.

Image Source: istock

திடீரென பாலூட்டுதல் நிறுத்துவது

பாலூட்டுதலை நிறுத்தும் போது புரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடாஸின் அளவு குறைகிறது. இருப்பினும் முன்னே இருந்த மாதிரி பசி கொஞ்ச நாளைக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

Image Source: istock

கலோரிகள் எரிக்கப்படுவதில்லை

பாலூட்டுதலை நிறுத்திய பிறகு அதே அளவு உணவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். கலோரிகளை குறைக்காமல் இருந்தால் இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Image Source: istock

ஹார்மோன் மாற்றங்கள்

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழலாம். புரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடாஸின் ஹார்மோன் குறைப்பு வளர்ச்சிதை மாற்றத்தை குறைத்து கொழுப்பு சேமித்தலையும் பாதிக்கிறது.

Image Source: istock

குறைவான உடல் செயல்பாடுகள்

பிரசவத்திற்கு பிறகு பெண்கள் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுவது குறைகிறது. இதுவே உடல் பருமனுக்கு வழி வகுக்கிறது. குறைவான உடல் செயல்பாடுகள் அதிகப்படியான கலோரிகளை எரிப்பதில்லை.

Image Source: istock

உடலில் ஏற்படும் மாற்றங்கள்

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு மார்பகங்களின் அளவு மற்றும் உறுதி குறையும். மாதவிடாய் சுழற்சி மீண்டும் ஏற்படும். மனநிலை மாற்றங்கள் இருக்கும். சரும பிரச்சனைகள் மற்றும் முகப்பருக்கள் தோன்றலாம்.

Image Source: istock

என்ன செய்ய வேண்டும் ?

ஹார்மோன் மாற்றங்கள் மனநிலையை பாதிக்கும் என்பதால் பெண்கள் மனநிலையை கண்காணிக்க வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும். போதுமான உறக்கம் அவசியமாகும்

Image Source: istock

Thanks For Reading!

Next: கார் சாவி தொலைந்தால் செய்ய வேண்டியவை என்னென்ன தெரியுமா ?

[ad_2]