[ad_1] தாய்ப்பால் சுரப்பை பூண்டு பாதிக்குமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

தாய்ப்பால் சுரப்பை பூண்டு பாதிக்குமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Jul 8, 2024

By: mukesh M

தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு பூண்டு!

தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் உட்கொள்ளும் உணவுகள் தாய்ப்பால் வழியே குழந்தைக்கு சென்று அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் நிலையில், குறித்த இந்த காலத்தில் பூண்டு உட்கொள்வதன் நன்மை - தீமை பற்றி இங்கு காணலாம்!

Image Source: pexels-com

மருத்துவ குணம் நிறைந்த பூண்டு!

இந்திய உணவுகளில் பெரும்பாலும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. பூண்டு உணவுக்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் பழங்காலத்தில் இருந்தே மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது

Image Source: istock

ஊட்டச்சத்துக்கள்!

பூண்டில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் என நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய இது உதவுகிறது.

Image Source: istock

தாய்ப்பால் கொடுக்கும் போது சாப்பிடலாமா?

தாய்ப்பால் கொடுக்கும் போது பூண்டு சாப்பிடுதல் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. குழந்தைக்கும் பூண்டிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் தாய்ப்பால் வழியாக சென்றடைகிறது. பூண்டை அளவாக சேர்த்துக் கொள்ளுதல் எந்தவித ஒவ்வாமைகளையும் ஏற்படுத்துவதில்லை.

Image Source: istock

தாய்ப்பாலின் சுவையில் மாற்றம்?

பூண்டில் உள்ள வலுவான வாசனை தாய்ப்பாலின் சுவையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கு நேரடியாக சென்றடைகிறது.

Image Source: istock

பால் சுரப்புக்கு பூண்டு உதவுமா?

தாய்ப்பால் சுரப்பை தூண்டுவதற்கு பூண்டு உதவுகிறது. எனவே தாய்ப்பால் குறைபாடு உள்ள தாய்மார்கள் பூண்டினை தினசரி உணவில் அளவாக சேர்த்துக் கொள்ளலாம்.

Image Source: istock

பூண்டு மாத்திரைகள்!

பூண்டில் பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பதால் இது மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. ஆனால் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரை வடிவில் பூண்டினை உட்கொள்ளக்கூடாது.

Image Source: istock

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது!

பூண்டில் உள்ள பண்புகள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. எனவே தாய்ப்பாலின் வழியாக குழந்தைக்கும் ஊட்டச்சத்து கிடைப்பதால் குழந்தையின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது.

Image Source: istock

செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது!

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். இதனை சரி செய்ய பூண்டு உதவுகிறது. பூண்டு செரிமான பிரச்சனைகளை சரி செய்து மலமிளக்கியாக செயல்படுகிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: உங்க வீட்டிற்குள்ளே 'தோட்டம்' வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

[ad_2]