Jul 15, 2024
சீரான செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை, எண்ணற்ற நன்மைகளை அன்னாசி பழம் கொண்டுள்ளது. தினமும் ஒரு அன்னாசிப்பழ துண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு கிடைக்கும் பலன்களை இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
அன்னாசி பழத்தில் உடலின் தினசரி செயல்பாட்டிற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்
Image Source: istock
அன்னாசியில் ஃபிளாவனாய்டுகள், பீனால்கள் போன்ற வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடவும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது
Image Source: istock
அன்னாசி துண்டில் செரிமான என்சைமை தூண்டும் ப்ரோமெலைன் உள்ளது. அதன் தொடர்ச்சியான நுகர்வு, பெரிய உணவுகள் சாப்பிட்டாலும் எளிதாக ஜீரணமாகிட வழிவகுக்கும்.
Image Source: istock
அன்னாசி துண்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலம் வெளியேற்றத்தை எளிதாக்கி மலச்சிக்கல் ஏற்படும் அபாயத்தை குறைக்க செய்கிறது. நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுவோர் கட்டாயம் ஒரு அன்னாசி துண்டுகளை தினமும் சாப்பிட வேண்டும்
Image Source: istock
அன்னாசி பழத்திற்கு புற்றுநோய் எதிர்க்கும் பண்புகள் உள்ளது. பல புற்றுநோய்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படுகின்றன. ஆனால், அன்னாசியில் உள்ள ப்ரோமெலைன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது
Image Source: istock
வைட்டமின் சி நிறைந்த அன்னாசிப்பழம், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. ஆய்வின் படி, அன்னாசி துண்டுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டவர்களுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதல் குறைவாகவே இருந்துள்ளது
Image Source: istock
அன்னாசி துண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், சிறந்த வலி நிவாரணியாக செயல்படக்கூடும். குறிப்பாக கீல்வாதத்தில் ஏற்படும் முதுகு வலியை போக்கக்கூடும். மேலும், மாதவிடாய் வலியை குறைக்கவும் உதவக்கூடும்
Image Source: istock
அன்னாசியில் வைட்டமின் சி இருப்பதால், சரும ஆரோக்கியத்தை காக்க முடியும். அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் சுருக்கங்களை போக்குவதோடு சரும சேதங்களை குறைக்கக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!