Jun 18, 2024
வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் இருந்தாலும், சில பக்கவிளைவுகளை உண்டாக்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இந்தப் பதிவில், வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மை, தீமை பற்றி விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
வேர்க்கடலையில் MonoSaturated கொழுப்புகள் உள்ளது. அவை கொலஸ்ட்ராலை அளவை குறைத்து மாரடைப்பு போன்ற இதய நோய் அபாயத்தை குறைக்கக்கூடும்
Image Source: istock
வேர்க்கடலையில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து உள்ளது. அவை பசியை கட்டுப்படுத்தி அதிகமாக சாப்பிடுவதை தடுக்கக்கூடும். ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் நுகர்வு குறைவது, நிச்சயம் எடை இழப்புக்கு உதவக்கூடும்
Image Source: istock
வேர்க்கடலை குறைவான கிளைசெமிக் குறியீட்டை கொண்ட உணவாகும். அதை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு சட்டென அதிகரிக்க செய்யாது. அதை தொடர்ச்சியாக உட்கொள்வது, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திடும். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த ஸ்நாக்ஸ் வகையாகும்
Image Source: istock
வேர்க்கடலையில் வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் பாதிப்பின்றி பாதுகாக்கக்கூடும்
Image Source: pexels-com
சிலர் வேர்க்கடலை ஒவ்வாமையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மூச்சு விடுவதில் சிக்கல், தொண்டையில் வீக்கம் போன்ற அறிகுறிகள் நாளடைவில் மோசமாகி உயிருக்கே ஆபத்தாக மாறலாம். வேர்க்கடலை சாப்பிடுகையில் ஏதேனும் அசெளகரியத்தை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசியுங்கள்
Image Source: istock
ஒரு கைப்பிடி வேர்க்கடலையில் சுமார் 170 கலோரிகள் இருக்கக்கூடும் என ஆய்வுகள் கூறுகிறது. அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, நிச்சயம் எடை அதிகரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அவற்றை மிதமான அளவில் சாப்பிடுவதை உறுதி செய்வது அவசியம்
Image Source: pexels-com
வேர்க்கடலையில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது. ஆனால், ஒமேகா 3 கிடையாது. இந்த நிறைவுறா கொழுப்பு அமிலங்களின் சமநிலையின்மை, உடலில் வீக்கத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது
Image Source: istock
வேர்க்கடலை உடலில் தாதுக்கள் உறிஞ்சுதலை தடுப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. அதிலுள்ள பைடிக் அமிலம், இரும்பு, ஜிங்க், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உறிஞ்சுவதைத் தடுக்க செய்கிறது. இந்த குறைபாடு, உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!