Jul 18, 2024
உங்கள் சரும ஆரோக்கியம் காப்பதோடு, பொலிவான - பளபளப்பான சருமம் பெற உதவும் கால நேர பழக்க - வழக்கங்கள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்!
Image Source: istock
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் பருகுவது, இரவு நேரத்தில் உங்கள் சருமம் இழந்த ஈரப்பதத்தை நிரப்ப உதவும். சரும வறட்சி, தோய்வு போன்ற பிரச்சனைகளை தடுக்க இது உதவியாக இருக்கும்!
Image Source: pexels-com
சரும துளைகளில் தேங்கியிருக்கும் சரும பிசுக்கு, மாசு போன்றவற்றை போக்க, காலை எழுந்தவுடன் உங்கள் சருமத்தை இயற்கை பேஷ் வாஷ் பயன்படுத்தி நன்கு சுத்தம் செய்வது அவசியம்!
Image Source: istock
சருமத்தில் உள்ள மாசுவை போக்க சரும ஸ்க்ரப்-களையும் நாம் பயன்படுத்தலாம். சருமத்தின் மேல் அடுக்கில் மறைந்திருக்கும் இறந்த செல்களை போக்க இது உதவியாக இருக்கும்!
Image Source: istock
சருமத்தின் pH அளவை சமநிலையில் வைக்கும், சருமம் தளர்வடைவதை தடுக்கவும் இந்த சரும Toner-கள் உதவியாக இருக்கும். (உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான Toner வாங்கி பயன்படுத்துவது அவசியம்)
Image Source: istock
உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு கொண்ட மாய்சுரைசர் கிரீமினை உங்கள் சருமத்திற்கு தவறாது பயன்படுத்துவது நல்லது!
Image Source: istock
இதேப்போன்று வீட்டிற்கு வெளியே வரும் போது சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். சூரியனின் புற ஊதா கதிர்வீச்சில் இருந்து உங்கள் சருமத்தை காக்க இது உதவியாக இருக்கும்!
Image Source: istock
சரும பராமரிப்பு கிரீம்களை பயன்படுத்துவதற்கு முன்னரும் - பின்னரும் உங்கள் சருமத்திற்கு மிதமாக மசாஜ் செய்து விடுவது அவசியம். சருமத்தில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்ய இது அவசியமாகிறது!
Image Source: istock
காலையில் சிற்றுண்டியை தவிர்ப்பது ஆற்றல் இழப்புக்கு வழிவகுப்பதோடு, சரும செல்களின் சிதைவுக்கும் வழிவகுக்கும். எனவே, காலை உணவை தவிர்க்காது சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்!
Image Source: istock
Thanks For Reading!