Jun 25, 2024
ஒரு கைப்பிடி அளவு வெள்ளை எள் விதை சாப்பிடுவது, உடலுக்கு உடனடி ஆற்றலை தரக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. உடலை சுறுசுறுப்பாக மாற்றி நாள் முழுவதும் ஆக்டிவ்வாக வைத்திருக்கக்கூடும்
Image Source: istock
வெள்ளை எள் விதையில் கால்சியம், மக்னீசியம், இரும்பு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. அவை உடல் ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன
Image Source: istock
வெள்ளை எள் விதையில் ஜிங்க் போன்ற தாதுக்கள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது
Image Source: istock
வெள்ளை எள் விதையில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்தை காத்து வறட்சி ஏற்படுவதை தடுக்கிறது
Image Source: istock
இந்த விதையில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது. இது செரிமானத்தை சீராக்குவதோடு ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்
Image Source: istock
வெள்ளை எள் விதையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், இதய ஆரோக்கியத்தை பாதுகாத்திட முடியும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கக்கூடும்
Image Source: istock
இந்த விதையில் கால்சியம் உள்ளடக்கம் இருப்பதால், எலும்புகள் வலுவாகக்கூடும். மூட்டு வலி, எலும்புப்புரை போன்ற நோய் அபாயங்களை தடுக்கக்கூடும்
Image Source: istock
வெள்ளை எள் விதையில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை மூளையில் செரோடோனின் சுரப்பை தூண்டி பாசிட்டிவ் மனநிலையை உண்டாக்கக்கூடும். மன அழுத்தம் மற்றும் மனக்கவலை காலப்போக்கில் மறையக்கூடும்
Image Source: pexels-com
இந்த விதையை சமையலில் பல விதங்களிலும் பயன்படுத்தலாம். குழம்பு, டெசர்ட் ரெடி செய்கையில் சேர்த்துக்கொள்ளலாம் (அ) சாலட், சூப் மீது தூவி பயன்படுத்திக் கொள்ளலாம்
Image Source: pexels-com
Thanks For Reading!