[ad_1] தினமும் 5-6 கப் டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்

Jul 13, 2024

தினமும் 5-6 கப் டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்

Nivetha

அதிகளவு டீ

ஒரு நாளைக்கு 5-6 கப் டீ குடிப்பவர்களுக்கு ஒரு சில வைட்டமின்கள் குறைபாடு மற்றும் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Image Source: istock

வைட்டமின் பி1 குறைபாடு

தினசரி அதிகளவு டீ குடிப்பவர்களுக்கு வைட்டமின் பி1 குறைபாடு ஏற்படும். இந்த குறைபாடு காரணமாக கை-கால் வலி, கால் வீக்கம், படபடப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

Image Source: pixabay

ஞாபக மறதி

மேலும் நமது உடலில் வைட்டமின் பி1 குறைபாடு ஏற்படும் பட்சத்தில் மனக்குழப்பம், ஞாபக மறதி, பசியின்மை போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

Image Source: pexels

உணவு வகைகள்

அதிக டீ குடிப்பவர்கள் இந்த குறைபாட்டினை போக்க வைட்டமின் பி1 நிறைந்த உருளைக்கிழங்கு, ஆரஞ்சு ஜூஸ், கம்பு, திணை, கேழ்வரகு, காலிஃபிளவர் உள்ளிட்டவைகளை உங்களது உணவு வகைகளில் சேர்த்து கொள்ளுங்கள்.

Image Source: Samayam Tamil

இரும்புசத்து சேராமல் தடுக்கிறது

டீயில் நிறைந்துள்ள டானிஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அது அதிகளவு டீ குடிப்பவர்கள் உடலில் இரும்புசத்து சேர விடாமல் தடுக்கிறது. அனீமியா ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

Image Source: istock

மருந்துகள் வேலை செய்யாது

அதிகளவு டீ குடிப்பவர்களுக்கு புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் கீமோ தெரபி சிகிச்சை பலன் தராது என்று கூறுகிறார்கள். காரணம், அதிகளவு டீ குடிப்பதால் ஹீமோதெரபி மருந்துகள் வேலை செய்யாது.

Image Source: pexels

ஒரு நாளைக்கு எவ்வளவு டீ குடிக்கலாம் ?

ஒரு நாளைக்கு சராசரியாக 2 கப் டீ என்பது போதுமானது. அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Image Source: pexels

மூட்டு வலி

அதிகளவு டீ குடிப்போருக்கு அதிகளவு மூட்டு வலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Image Source: istock

எலும்பு

எலும்பு வலுப்பெற உதவும் அதே டீ, அதிகளவு எடுத்து கொள்ளும் பட்சத்தில் எலும்புகள் வலுவிழக்க நேரிடும். பற்கள் சிதைவுறவும் அதிக டீ குடிப்பது ஓர் காரணமாகும்.

Image Source: istock

Thanks For Reading!

Next: ஏலக்காயை பாலில் கொதிக்க வைத்து குடித்தால் என்னவாகும் தெரியுமா ?

[ad_2]