[ad_1] தியேட்டரில் ரிலீஸ் ஆன பிறகு எடிட் செய்யப்பட்ட படங்கள்

தியேட்டரில் ரிலீஸ் ஆன பிறகு எடிட் செய்யப்பட்ட படங்கள்

Anoj

May 20, 2024

ஓபன்ஹெய்மர்

ஓபன்ஹெய்மர்

ஓபன்ஹெய்மரில் நெருக்கமான காட்சி ஒன்றில், பகவத் கீதையின் ஒரு வரியை Cillian Murphy படிப்பது சலசலப்பை உண்டாக்கிய நிலையில், இந்து சமூகத்தை 'புண்படுத்திய' காட்சியை அகற்றுமாறு சிபிஎஃப்சி கோரியதாக கூறப்படுகிறது

Image Source: facebook-com/oppenheimermovie

ஆதிபுருஷ்

ஆதிபுருஷ் படத்தில் வரக்கூடிய வசனங்களுக்கு சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, இயக்குனர் ஓம் ராவத் ஒரு வாரத்திற்குப் பிறகு படத்தின் புதிய பதிப்பை வெளியிட்டார்

Image Source: x-com/taran_adarsh

ஜஸ்டிஸ் லீக்

ஜஸ்டிஸ் லீக் திரைப்படம் வெளியான 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குனர் ஜாக் ஸ்னைடர் அப்படத்தின் ரீ எடிட் செய்யப்பட்ட 4 மணி நேரம் காட்சியை வெளியிட்டார்

Image Source: x-com/snydercut

டைட்டானிக்

2021ல் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படத்தின் 3டி பதிப்பை சீனாவில் வெளியிட்டார். அப்போது, படத்தில் இடம்பெற்றிருந்த நிர்வாண காட்சி நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Image Source: instagram-com/primevideo

Zootopia

Zootopia எனும் அனிமேஷன் திரைப்படத்திற்கு, உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் உலகின் வெளியான பகுதிகளை சேர்ந்த பிராந்திய விலங்குகள், சிறப்பு தோற்றத்தில் வரும் வகையில் ரீ-எடிட் செய்யப்பட்டிருந்தது

Image Source: facebook-com/zootopiacity

தி வோல்ஃப் ஆஃப் வோல் ஸ்ட்ரீட்

லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த The Wolf of Wall Street படத்தின் துபாய் பதிப்பு ஓரிஜனலை காட்டிலும் 45 நிமிடங்கள் குறைவாக இருந்தது. படத்தில் அவதூறு காட்சிகள் வராத வகையில் ரீ எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது

Image Source: facebook-com/thewolfofwallstreet

Pride & Prejudice

ப்ரைட் அண்ட் ப்ரெஜுடிஸ் திரைப்படம் புத்தகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ஆனால், படத்தின் இறுதியில் இடம்பெற்ற pda காட்சிக்கு அப்புத்தகத்தின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.பிறகு, ரீ எடிட் செய்யப்பட்ட வெர்ஷன் வெளியானது

Image Source: facebook-com/prideandprejudice2005movie

அலாவுதீன்

அலாவுதீன் படத்தில் ஆரம்பத்தில் வரக்கூடிய Arabian Nights பாடலில், அரேபிய மக்களை வன்முறையாளர் வடிவில் சித்தரித்ததற்கு கண்டனங்கள் எழுந்தது. டிஸ்னி நிறுவனத்திற்கு பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டது

Image Source: facebook-com/disneyprincess

2001: A Space Odyssey

Stanley Kubrick இயக்கிய எ ஸ்பேஸ் ஒடிஸி திரைப்படம், தியேட்டரில் வெளியான பிறகு 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. அதன் பிரீமியர் ஷோக்களில் பார்வையாளர்கள் மிகவும் அமைதியாக இருந்தால், படத்தின் நீளத்தை இயக்குனர் குறைக்க செய்தார்

Image Source: facebook-com/stanleykubrickla

Thanks For Reading!

Next: இராணுவ குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த நடிகர்கள்!

[ad_2]