Jun 6, 2024
திருமணம் என்பது வாழ்க்கையின் மறு பாதியைத் தீர்மானிப்பது என்பதால் அதுகுறித்த தயக்கமும், நிச்சயமற்ற உணர்வும் இருப்பது இயல்பு தான். இந்நிலையில் திருமணத்தை தவிர்க்க பொதுவாக கூறப்படும் காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
Image Source: unsplash-com
மற்றவரது மகிழ்ச்சியற்ற அல்லது தோல்வியடைந்த திருமணங்களைப் பார்த்ததால் அதன் மீதுள்ள ஈடுபாடு குறைகிறது. மோசமான திருமண வாழ்க்கையை விட சிங்கிளாக இருப்பதே மேல் என்கிற எண்ணம்.
Image Source: unsplash-com
தனிமையையும் சுதந்திரத்தையும் அதிகம் விரும்புபவர்கள் திருமணம் அதற்குத் தடையாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். பிறருக்குப் பதில் கூறுவதையும், ஒருவரைக் கேட்டு முடிவுகளை எடுப்பதையும் வெறுக்கிறார்கள்.
Image Source: unsplash-com
திருமணம் என்பது ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் சேமிப்புகளைக் கரைக்கும் ஒரு நிகழ்வு. திருமணத்திற்கு பிறகும் குடும்பம், குழந்தைகள் என்று செலவு வளர்ந்து கொண்டே தான் போகும் என்கிற பயம்.
Image Source: unsplash-com
திருமண வாழ்க்கை மிகப் பெரிய பொறுப்புகளையும் உள்ளடக்கியது. குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது, வீட்டைப் பராமரிப்பது, கூடுதல் சொந்தங்களையும், செலவுகளையும் சமாளிப்பது போன்ற பொறுப்புகளைக் கண்டு தயங்குவது.
Image Source: unsplash-com
மிகச் சரியாகப் பொருந்தும் வாழ்க்கைத் துணைக்கான தேடுதலில் தனது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் நபர் கிடைக்காதது. அல்லது எவர் மீதும் நெருக்கமான இணக்கம் வராமல் இருப்பது.
Image Source: unsplash-com
தனது கடந்த கால காதல் அல்லது அந்த நபருடன் ஏற்பட்ட மனக்கசப்பும் காயங்களும் நீங்காத வடுவாக மனதில் நின்றிருப்பது. மோசமான அனுபவங்கள் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.
Image Source: unsplash-com
திருமணம் என்பது ஒரு துணையை நம்பி குடும்பத்தைத் தொடங்குவதாகும், ஆனால் சிலர் குழந்தைகளைப் பெற்று, வளர்ப்பதில் விருப்பமில்லாததால் திருமணத்தையும் விரும்புவதில்லை.
Image Source: pexels-com
தனக்குப் பிடித்த நபருடன் சந்தோஷமாகவும், குடும்பமாகவும் வாழத் திருமணத்தின் தேவை என்ன உள்ளது என்று யோசிப்பது. தங்களது உறவிற்கு மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெற விருப்பமில்லாதிருத்தல்.
Image Source: unsplash-com
Thanks For Reading!