Jun 1, 2024
திருமணத்தின் போது அனைவரும் அழகாக இருக்கவே ஆசைப்படுவோம். செயற்கை மேக்கப்பை நம்பி இருக்காமல், இயற்கையான வழியில் சருமத்தில் பிரகாசத்தை பெறுவது எப்படி என்பதை இந்தப் பதிவில் காணலாம்
Image Source: istock
திருமணத்திற்கு சில மாதங்கள் இருக்கும் போது, ஃபேஷியல் செய்திட ஆரம்பியுங்கள். இது சருமம் சுத்தமாகவும், நீரேற்றத்துடன் இருப்பதை உறுதிச்செய்கிறது. சந்தனம், முல்தாணி மெட்டி போன்ற இயற்கை ஃபேஷியலை முயற்சிக்கலாம்
Image Source: pexels-com
எக்ஸ்ஃபோலியேட் செய்வது என்பது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் வளர உதவுகிறது. சரும வெடிப்பு, முகப்பரு தழும்புகளை தடுப்பதுடன் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் குறைக்கிறது
Image Source: istock
முக சீரம் பயன்படுத்துதல் சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது. சீரமம் பயன்படுத்துகையில், தோல் உரித்தல் நடப்பதால் சருமம் உறுதியாகவும், மென்மையாகவும் மாறுகிறது
Image Source: istock
வைட்டமின்கள் அதிகமுள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். கரும்புள்ளிகள், சிவத்தல், சுருக்கங்கள், வறட்சி போன்ற சரும பிரச்சனைகளை சரிசெய்திட பெரிதும் உதவியாக இருக்கும்.
Image Source: istock
முடி ஆரோக்கியத்தை வலுப்படுத்த இயற்கை ஹேர் பேக்குகளை முயற்சியுங்கள். உச்சந்தலையில் எண்ணெய் பசை இருப்பது, முடி உதிர்வு, முடி வேர்களில் நீரேற்றம் இல்லாதது போன்ற பிரச்சனைகளை சரிசெய்திட உதவுகிறது
Image Source: istock
தலைமுடியில் தவறாமல் எண்ணெய் வைப்பது, முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு உச்சந்தலையில் எரிச்சலையும் குறைக்கக்கூடும். தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன
Image Source: freepik-com
திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கும்போது, குறைந்தது 8 மணி நேரம் தூங்கும் பழக்கத்தை பின்பற்றுங்கள். இவை சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
Image Source: istock
திருமணம் நெருங்கும் சமயத்தில், சூரிய ஒளி கதிர்வீச்சுகளில் இருந்து தப்பிக்க சன்ஸ்கிரீன், தொப்பி போன்றவற்றை அணியுங்கள். ஏனெனில், சருமத்தில் சூரிய ஒளி நேரடி வெளிப்பாடு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
Image Source: istock
Thanks For Reading!