Jun 25, 2024
ஜிகா (Zika) - டெங்கு, சிக்கன் குன்யாவை போன்றே கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் காய்ச்சல் ஆகும். கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் இந்த காய்ச்சலின் காரணங்கள் என்ன? தடுப்பு வழிகள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி இந்த வைரஸ் தொற்று ஆனது Aedes aegypti மற்றும் Aedes albopictus கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. குறிப்பாக, ZEE-kuh வைரஸ் தாக்கப்பட்ட கொசுக்கள் கடிக்கும் போது இந்த வைரஸ் தொற்று பரவுகிறது.
Image Source: istock
ஆய்வுகளின் படி இந்த வைரஸ் தொற்று ஆனது கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது கருவில் வளரும் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. நிபுணர்கள் கூற்றுப்படி இந்த வைரஸ் தாக்குதல் ஆனது, குழந்தைகளின் பிறவி குறைப்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
Image Source: pexels-com
குறித்த இந்த வைரஸ் தொற்று ஆனது பாலியல் ரீதியாக பரவும் தன்மை கொண்டது. குறிப்பாக இந்த வைரஸ் ஆனது விந்துவில் தேங்கி, ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டுள்ளது.
Image Source: istock
பால்வினை நோய் போன்றே இந்த வைரஸ் தொற்றும், இரத்தம் வழியே மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டுள்ளது. அதாவது, வெட்டு காயங்கள், இரத்த மாற்றம் போன்ற வழிகள் மூலமும் இந்த வைரஸ் தொற்று பரவக்கூடும்.
Image Source: istock
ஜிகா வைரஸ் தாக்கப்பட்ட நபர்கள் கடுமையான காய்ச்சலை எதிர்கொள்ள கூடும். கடுமையான காய்ச்சலுடன், தலைவலி, மூட்டுகளில் வலி, கண்களில் சிவத்தல் -எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்ள கூடும்.
Image Source: istock
தகவல்கள் படி இந்த ஜிகா வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பு ஊசியோ, சிகிச்சை மருந்துகளோ இல்லை. அதேநேரம் வைரஸ் தொற்றின் அறிகுறிகள் மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்பதால், இந்த தொற்றை வரும் தடுப்பதே சிறந்தது!
Image Source: istock
வீட்டில் கொசு தேங்குவதன் வாய்ப்புகளை குறைப்பது நல்லது. பாலியல் ரீதியாக பரவும் இந்த ஜிகா வைரஸினை தடுக்க, பாதுகாப்பான பாலுறவை உறுதி செய்வது நல்லது.
Image Source: istock
ஜிகா வைரஸ் தொற்று காரணமாக உண்டாகும் பாதிப்புகளை தவிர்க்க, வைரஸ் தொற்றின் அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரை சந்தித்து - பரிந்துரைக்கப்படும் வாழ்க்கை முறை மாற்றங்களை கடைப்பிடிப்பது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!