Aug 13, 2024
சியா விதை அதன் தனித்துவமான பண்புகள் காரணமாக, மலச்சிக்கலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
100 கிராம் சியா விதையில் 34 கிராம் நார்ச்சத்து இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அவை குடல் இயக்கத்தை சீராக்கி மலம் வெளியேற்றத்தை எளிதாக்க உதவி புரிகிறது
Image Source: pexels-com
சியா விதை ஃப்ரீபயாடிக் தன்மை கொண்டிருப்பதால், குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவித்து, செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை சீராக்க பயன்படுகிறது.
Image Source: istock
சியா விதைகள் தண்ணீரை நன்றாக உறிஞ்சு ஜெல் வடிவ அமைப்பை பெறுவதால், செரிமான மண்டலத்தில் எளிதாக பயணித்து மலம் வெளியேற்றத்திற்கு உதவி புரிகிறது
Image Source: istock
சியா விதைகள் மெதுவாக ஜீரணமாகி, நார்ச்சத்து மற்றும் பிற சத்துக்கள் படிப்படியாக வெளியேற வழிவகுக்க செய்கிறது. இதன் மூலம், குடல் இயக்கமும் சீராக இருக்கக்கூடும்
Image Source: istock
சியா விதைகள், மலம் கழிக்கும் எண்ணிக்கை மற்றும் நிலைத்தன்மையை அதிகரித்து மலச்சிக்கல் அபாயத்தை போக்க செய்கிறது. மலத்தை மொத்தமாக வெளியேற்றும் சிகிச்சைக்கு பெரிதும் உதவக்கூடும்
Image Source: istock
சியா விதைகள் குடல் இயக்கத்தின் போது ஏற்படும் வீக்கம், அசெளகரியம் போன்ற அறிகுறிகளை குறைத்து மலம் எளிதில் வெளியேற உதவி புரிகிறது.
Image Source: istock
தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 அல்லது 2 டீஸ்பூன் சியா விதையை 15 முதல் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற முடியும்
Image Source: istock
சியா விதைகளில் நன்மைகள் இருந்தாலும், சில ஆபத்துகளும் இருக்கின்றன. அவற்றை ஒழுங்காக ஊறவைக்கவில்லை எனில், உணவுக்குழாயில் விரிவடைந்து மூச்சுத்திணறலை உண்டாக்கலாம். அதிகமான சியா விதைகளை உட்கொள்வது, வயிறு உப்புசம், வாயு மற்றும் அடிவயிற்று வலியை உண்டாக்கலாம்
Image Source: istock
Thanks For Reading!