May 2, 2024
By: Anojதூக்கத்தில் பேசுவதை மருத்துவ ரீதியாக சோம்னிலோக்வி என்று அழைக்கின்றனர். இது ஆபத்தான நோயாக கருதப்படவில்லை என்றாலும், அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்
Image Source: istock
3 முதல் 10 வயதிலான குழந்தைகள் தூக்கத்தில் பேசும் பழக்கத்தை அதிகமாக கொண்டிருப்பார்கள். அதில் 5 சதவீதம் பேர் பெரியவர்கள் ஆன பிறகும் தொடர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன
Image Source: pexels-com
பொதுவாக தூங்கும் போது முணுமுணுக்க மட்டுமே செய்வார்கள். அவர்கள் பேசுவது புரியாது. ஆனால், ஒரு சிலர் நிஜத்தில் பேசுவதை போல் தெளிவாக பேசுவார்கள். தூக்கத்தில் பேசுவது 30 நொடிகள் வரை நீடிக்கலாம் அல்லது குறிப்பிட்ட வார்த்தையாக மட்டுமே இருக்கலாம்
Image Source: pexels-com
மன அழுத்தம், சோர்வு, போதுமான தூக்கம் இல்லாமை போன்ற வெளிப்புற காரணங்களால் தூக்கத்தில் பேசும் பழக்கம் ஏற்பட செய்யலாம்
Image Source: istock
இந்த பழக்கம் மரபணு ரீதியாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. உங்க பெற்றோர் அல்லது தாத்தாவுக்கு தூக்கத்தில் பேசும் பழக்கம் இருந்தால், உங்களுக்கும் சிறு வயதில் வர செய்யலாம்
Image Source: istock
தூக்கத்தில் பேசும் பழக்கத்திற்கு தூக்கமின்மை முக்கிய காரணமாகும். நீங்கள் தூக்கம் தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்தால், கட்டாயம் தேவையற்ற விஷயங்களை தூக்கத்தில் பேச செய்வீர்கள். அதேபோல், தூக்கத்தில் பேசுவது கனவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்
Image Source: istock
நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் கூட தூக்கத்தில் பேசுவதை தூண்ட செய்யலாம். குறிப்பாக, anticholinergics, sedatives போன்றவை தூக்கத்தில் பேசும் நிலையை அதிகரிக்க செய்யலாம் என ஆய்வுகள் கூறுகிறது
Image Source: istock
தூங்கும் நேரத்தை ஒழுங்குப்படுத்துவது, ஆல்கஹால் நுகர்வு குறைப்பது, இரவில் காபி குடிப்பதை தவிர்ப்பது, மன அழுத்தம் பயிற்சிகள், தூங்கும் சூழலை பராமரிப்பது ஆகியவை தூக்கத்தில் பேசுவதை குறைக்க செய்யலாம்
Image Source: istock
தூக்கத்தில் பேசுவதற்கு மருத்துவ சிகிச்சை அவசியமற்றது. ஆனால், தூங்கும் போது கத்துவது அல்லது வித்தியாசமாக நடந்துகொள்வது போன்றவை REM ஸ்லீப் பிஹேவியர் டிஸார்டர் நோயாக இருக்க செய்யலாம். இந்த அறிகுறிகள் பல மாதங்களாக நீடித்தால், மருத்துவ ஆலோசனை பெறலாம்
Image Source: istock
Thanks For Reading!