May 24, 2024
By: Anojநம்மில் பலரும் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், அவற்றை சருமம், முடி, பல் ஆரோக்கியம் என பல வழிகளில் பயன்படுத்த செய்யலாம். அதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: pexels-com
வாழைப்பழத் தோலில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால், இயற்கை உரமாக பயன்படக்கூடும். அதை சிறிய துண்டுகளாக நறுக்கி, செடிகளை சுற்றியுள்ள மண்ணிற்குள் வைக்க வேண்டும்.
Image Source: pexels-com
வாழைப்பழத் தோலின் உட்புறத்தை உங்கள் பற்களில் 2 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். தோலில் உள்ள தாதுக்கள் காலப்போக்கில் பற்களை வெள்ளையாக மாற்றக்கூடும்
Image Source: istock
வாழைப்பழ தோலை சருமத்தில் நேரடியாக தடவ செய்யலாம். இது இயற்கை மாய்சுரைசராக செயல்படுவதோடு முகப்பருக்களை குறைக்க உதவுகிறது. மேலும், சருமத்தில் உள்ள மருக்கள் மீது வாழைப்பழ தோலை இரவு முழுவதும் வைப்பது, அதனை காலப்போக்கில் மறைய வைக்கவும் செய்கிறது
Image Source: istock
வாழைப்பழ தோல், தலைமுடியில் ஈரப்பதம் மற்றும் ஷைனிங் அதிகரிக்க உதவக்கூடும். அதனை நேரடியாக தலைமுடியில் தடவலாம் அல்லது பிளெண்டரில் பேஸ்டாக்கி முடியில் அப்ளை செய்யலாம்
Image Source: istock
வெள்ளிப் பொருட்களை பாலிஷ் செய்ய வாழைப்பழத் தோலைப் பயன்படுத்த செய்யலாம். தோலை பிளெண்டர் பயன்படுத்தி பேஸ்டாக்க வேண்டும். அதை வெள்ளி பொருட்களில் தடவி, சில நிமிடங்களுக்கு பிறகு துடைத்து எடுத்தால் நன்கு பிரகாசமாக ஜொலிக்கக்கூடும்
Image Source: istock
வாழைப்பழத் தோலின் உட்புறத்தை ஷூவில் ஷைனிங் அதிகரிக்க பயன்படுத்த செய்யலாம். லேதர் ஷூவில் வாழைப்பழத் தோலை மென்மையாக தேய்த்துவிட்டு, துணியை கொண்டு துடைத்தால் ஷூ ஷைனிங்காக மின்னக்கூடும்
Image Source: istock
Aphid மற்றும் பிற தாவர பூச்சிகளைத் தடுத்திட, வீட்டு தோட்டத்தில் ஆங்காங்கே நறுக்கிய வாழைப்பழ தோலை வைக்க வேண்டும். தோலின் வாசனை பூச்சிகளை விரட்டும் இயற்கை வாசனையாக செயல்படக்கூடும்
Image Source: pexels-com
வாழைப்பழ தோலில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கின்றன. அவை சன் பர்ன், பூச்சி கடி போன்ற நிலைகளால் ஏற்படும் அசெளகரியத்தில் இருந்து உடனடி நிவாரணம் தர உதவக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!