Jun 1, 2024
போதுமான தூக்கத்தை தவிர்ப்பது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து - மாரடைப்பு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
Image Source: pexels-com
தூக்கம் என்பது நம் உடலை ரீசார்ஜ் செய்யும் ஒரு செயல்முறை ஆகும். நம் உடல் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை உற்பத்தி செய்வதோடு, ஹார்மோன் சமநிலையை உறுதி செய்யும் பண்பு இந்த உறக்கத்திற்கு உள்ளது.
Image Source: istock
போதுமான உறக்கத்தை நாம் தவிர்க்கும் போது உடல் செல்களின் மீள் உறுவாக்கத்திற்கு உதவம் ஹார்மோன்களின் சுரப்பு மட்டுப்படுகிறது. மேலும், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க செய்கிறது!
Image Source: istock
தூக்கத்தின் பற்றாக்குறை ஆனது கார்சோல், கிரெலின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன்களின் சமநிலையின்மை ஆனது கொலஸ்ட்ராலின் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கிறது.
Image Source: istock
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதன் விளைவாக உடல் உள் உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. இரத்த அழுத்தம், மாரடைப்பு, சுவாச பிரச்சனை போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
Image Source: istock
இயல்பான எடையை கொண்ட நபர்களை காட்டிலும், அளவுக்கு மிகுதியான எடை கொண்ட நபர்கள் போதுமான தூக்கத்தை தவிர்க்கும் போது இந்த கொலஸ்ட்ரால் அளவில் உயர்வை காண்கின்றனர்.
Image Source: istock
நாள் ஒன்றுக்கு 7 - 9 மணி நேரம் உறங்குவது போதுமான உறக்கமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் உறங்குவது தூக்கத்தின் முழுமையான பலனை அளிக்கும்.
Image Source: istock
போதுமான தூக்கத்தை உறுதி செய்ய ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம். குறிப்பாக நேர மேலாண்மை, ஆரோக்கிய உணவு வழக்கங்கள், உடற்பயிற்சி அவசியம்!
Image Source: istock
ஒரு சில ஆரோக்கிய சிக்கல்கள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இந்த போதுமான தூக்க நேரத்தை உறுதி செய்வதில் சிக்கலை உண்டாக்கும். இச்சூழலில் மருத்துவரின் உதவி நாடுவது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!