Jul 5, 2024
நாம் பல நேரங்களில் தூங்கி எழுந்திருக்கும் போது, கைகள் மரத்து போகியிருப்பதை கவனித்திருப்போம். அதற்கு மோசமான தூக்க நிலை உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
ஒரே நிலையில் நீண்ட நேரம் தூங்குவது, கை உணர்வின்மைக்கான முக்கிய காரணமாகும். கைகளை உடல் அல்லது தலையணை கீழ் வைப்பது, முழங்கைகள் வளைந்த நிலையில் தூங்குவது அல்லது கைகளை தலைக்கு மேல் வைத்திருப்பது போன்றவை நரம்பு சுருக்கத்திற்கு வழிவகுத்து உணர்வின்மை உண்டாக்கலாம்
Image Source: istock
இது வயது காரணமாக கழுத்தில் உள்ள குருத்தெலும்பு, தசைநார் போன்றவற்றில் ஏற்படும் இயற்கையான தேய்மானம் ஆகும். இதுனால் முதுகுதண்டில் ஏற்படும் சுருக்கம், கைகளில் உணர்வின்மை மற்றும் பலவீனத்தை உண்டாக்க செய்யலாம்
Image Source: istock
இது மூளை மற்றும் கழுத்தை சுற்றியுள்ள நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஏற்படும் நிலையாகும். இவை சில நேரங்களில் கை உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வை உண்டாக்கலாம் (அ) நிரந்தர நரம்பு சேதத்தை ஏற்படுத்தலாம்
Image Source: istock
உடலில் வைட்டமின் பி12 போதுமான அளவு இல்லாத பட்சத்திலும், கைகள் மற்றும் மணிக்கட்டுகளில் உணர்வின்மை உண்டாக்கக்கூடும்
Image Source: istock
இது நீரிழிவு நோயுடன் தொடர்புடைய நரம்பியல் கோளாறு ஆகும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் கை மற்றும் கால்களில் நரம்பு சேதத்தை சந்திக்க நேரிடும். இது உணர்வின்மை மற்றும் வலியை உண்டாக்கக்கூடும். குறிப்பாக, தூங்கும் போது வலி அதிகமாக இருக்கக்கூடும்
Image Source: istock
தூக்கத்தின் போது கைகள் மரத்து போவதற்கு, நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் காரணமாக இருக்கலாம். கீமோதெரபி மருந்துகள், இதயம் மற்றும் ரத்த அழுத்த மருந்துகள், நரம்பு செல்களை சிதைத்து இந்த நிலைக்கு வழிவகுக்கலாம்
Image Source: istock
கைகளை கொஞ்சம் நேரம் உதறிக்கொண்டிருந்தால், உணர்வின்மை மறந்துவிடக்கூடும். ஆனால், அவை நீண்ட நேரத்திற்கு நீடிக்கும் பட்சத்தில், நரம்பியல் நிபுணரை ஆலோசிப்பது நல்லது. அதேநேரம், மரத்து போவதுடன் கைகளில் வலி ஏற்படும் அதன் இயக்கம் பாதிக்கப்படுவது எச்சரிக்கை அறிகுறியாகும்
Image Source: pexels-com
கைகள் அல்லது மணிக்கட்டை அழுத்தும் தூக்க நிலைகளை தவிர்க்க வேண்டும். எப்போது ஒரு பக்கமாக திரும்பி தூங்க செய்யுங்கள். தூங்கும் முன்பு கை மற்றும் மணிக்கட்டுக்கு ஸ்டெர்ச்சிங் கொடுங்கள். உணர்ச்சியின்மை தூண்டுதலை கண்டறிந்தால் மட்டுமே தீர்வு காண முடியும்
Image Source: istock
Thanks For Reading!