[ad_1] தூங்குவதற்கு முன் ‘பாதங்களுக்கு Oil Massage’ செய்வதன் நன்மைகள்!

Jun 19, 2024

தூங்குவதற்கு முன் ‘பாதங்களுக்கு Oil Massage’ செய்வதன் நன்மைகள்!

mukesh M

பாதங்களுக்கு Oil Massage!

தூங்கச் செல்வதற்கு முன் பாதங்களை நன்றாக சுத்தப்படுத்தி தேங்காய் எண்ணெய் (அ) மசாஜ் செய்வதற்கு ஏற்ற எண்ணெய்களை பயன்படுத்தி மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Image Source: istock

இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது!

அன்றாடம் வேலை செய்து ஓய்ந்திருக்கும் பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம் கால்களில் இரத்த ஓட்டம் மற்றும் நெகிழ்வு தன்மை மேம்படுத்தப்படுகிறது. உடல் உள் உறுப்புகளில் சீரான இரத்த ஓட்டம் நிகழ்ந்தது, ஆழ்ந்து தூக்கம் பெற உதவுகிறது!

Image Source: istock

மன அழுத்தத்தை சரி செய்கிறது!

தூங்க செல்வதற்கு முன் பாதங்களில் நன்றாக ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் மன அழுத்தம், கவலை, பதட்டம் போன்றவை குறைந்து மன அமைதி கிடைக்கிறது. இது நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கிறது.

Image Source: istock

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது!

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ள நபர்கள் இரவு நேரங்களில் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம் இந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Image Source: istock

வீக்கத்தை குறைக்கிறது!

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பொதுவாக கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கங்களை சரி செய்ய தூங்க செல்வதற்கு முன் பாதங்களில் வீக்கம் ஏற்பட்டுள்ள இடங்களில் மிதமாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி வீக்கத்தை குறைக்க உதவும்.

Image Source: istock

தலைவலியை போக்கும்!

அடிக்கடி தலைவலி பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தூங்க செல்வதற்கு முன் பாதங்களில் ஆயில் மசாஜ் செய்து விட்டு தூங்கச் சென்றால் தலைவலி பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபடலாம்.

Image Source: istock

நக வளர்ச்சிக்கு உதவுகிறது!

ஆயில் மசாஜ் செய்யும் போது எண்ணெய்களில் உள்ள புரதச்சத்து மற்றும் வைட்டமின் ஈ போன்றவை சரும செல்களை சரி செய்ய உதவுகிறது. இதனால் ஆரோக்கியமான நக வளர்ச்சிக்கு இது உதவுகிறது.

Image Source: istock

பார்வை திறன் மேம்படுகிறது!

பாதங்களில் நம் கண்களுடன் தொடர்புடைய நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே தூங்க செல்வதற்கு முன் பாதங்களில் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் பார்வை திறனை மேம்படுத்த முடியும்.

Image Source: istock

சிறந்த தூக்கத்திற்கு உதவுகிறது!

தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு தூங்க செல்வதற்கு முன் பாதங்களில் ஆயில் மசாஜ் செய்து விட்டு தூங்க செல்லலாம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சிறந்த தூக்கத்திற்கு வழி வகுக்கிறது.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் எலுமிச்சை புல்!

[ad_2]