[ad_1] தென்னாப்பிரிக்கா அணி - ராசியில்லா அணி என அழைக்கப்படுவது ஏன்?

தென்னாப்பிரிக்கா அணி - ராசியில்லா அணி என அழைக்கப்படுவது ஏன்?

mukesh M

Jun 8, 2024

ராசி இல்லா கிரிக்கெட் அணி!

கிரிக்கெட் உலகை பொறுத்தவரையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆனது ராசி இல்லா கிரிக்கெட் அணியாக கருதப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவாக இங்கு காணலாம்.

Image Source: x-com

காரணம் என்ன?

காரணம் என்ன?

கிரிக்கெட் உலகில் வலிமைமிக்க ஒரு அணியாக உள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை. அதாவது, வெற்றியின் விளிம்பில் தோல்வியை தழுவி, கோப்பை கனவை இழந்து ராசியில்லா ஒரு அணியாக ரசிகர் முன்னிலையில் உள்ளது.

Image Source: x-com/proteasmencsa

1992 - மழை செய்த சதி!

1992 உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா 22 பந்துகளில் 13 ரன்கள் குவித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்ததுஉ. இதன் போது குறுக்கிட்ட மழை, தென்னாப்பிரிக்காயவின் கோப்பை கனவை தவிடுபொடியாக்கிய

Image Source: x-com/proteasmencsa

1999 - ஆலன் டொனால்ட் ரன் அவுட்!

இதேப்போன்று 1999-ஆம் ஆண்டு தொடரில் அரை இறுதி போட்டி வரை முன்னேறிய தென்னாப்பிரிக்கா, அரை இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. எனினும், இறுதி ஓவரில் ஆலன் டொனால்ட் ரன் அவுட் ஆக கோப்பை கனவு கலைந்தது.

Image Source: x-com/proteasmencsa

2003 - DLS குழப்பம்!

2003-ஆம் ஆண்டு உலக கோப்பையை தங்கள் சொந்த மண்ணில் விளையாடிய தென்னாப்பிரிக்கா, குரூப் ஸ்டேஜ் போட்டியில் - DLS முறைப்படி நிர்ணயித்த ஸ்கோரை எட்டியதாக நினைத்து கடைசி பாலில் டாட் பால் வைத்த பவுச்சர், தென்னாப்பிரிக்காவின் கோப்பை கனவை கலைத்தார்.

Image Source: x-com/proteasmencsa

2007 - அரையிறுதியில் படு தோல்வி!

2007-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் அரை இறுதிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா, அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, எதிர்பாரா தோல்வி கண்டு வெளியேறியது.

Image Source: x-com/proteasmencsa

2011 - காலிறுதியில் தோல்வி!

2011-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் நியூசிலாந்தை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, 222 எனும் எளிய இலக்கை நோக்கி விளையாடியது. வெறும் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் குவித்து வெற்றியை ஓரளவுக்கு உறுதி செய்த SA, ஜேக்கப் ஓரமின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட் இழந்து தோல்வி கண்டது!

Image Source: x-com/proteasmencsa

2015 - மோசமான பீல்டிங்!

2015-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய தென்னாப்பிரிக்கா அணி, அரையிறுதியில் மிகவும மோசமான பீல்டிங் செய்து, தோல்வியை தழுவி கோப்பை நூலிழையில் நழுவ விட்டது.

Image Source: x-com/proteasmencsa

டி20-யிலும் வாய்ப்பில்லை!

ஒருநாள் உலக கோப்பையில் இவ்வாறான தோல்விகளை கண்டதோடு இல்லாமல், 2009 மற்றும் 2014-ஆம் ஆண்டு தொடர்களில் அரை இறுதி வரை சென்று தோல்வியுடன் திரும்பியது. இதன் மூலம் 7 முறை உலக கோப்பை அருகே சென்று திரும்பி வந்த ராசியில்லா அணியாக தென்னாப்பிரிக்கா பார்க்கப்படுகிறது!

Image Source: x-com/proteasmencsa

Thanks For Reading!

Next: இந்திய அணிக்கு எதிராக முதல்முறையாக களமிறங்கும் 'பாகிஸ்தான் வீரர்கள்'

[ad_2]