[ad_1] தென்னிந்தியாவின் மிக அழகிய 'ட்ரெக்கிங் பாதைகள்' எங்கு இருக்கு தெரியுமா?

May 11, 2024

தென்னிந்தியாவின் மிக அழகிய 'ட்ரெக்கிங் பாதைகள்' எங்கு இருக்கு தெரியுமா?

Anoj

ட்ரெக்கிங் பாதைகள்

உலகின் மிக அழகான மலைப்பாதைகள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. குறிப்பாக, சாசக ஆர்வலர்களின் விருப்ப பட்டியலில் இடம்பெறக்கூடிய ட்ரெக்கிங் பாதைகள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்

Image Source: istock

சிம்மினி, கேரளா

சிம்மினி என்பது கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயம் ஆகும். இப்பகுகி 150க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு தாயாகமாக திகழ்கிறது. பறவைகள் ஆர்வலர்கள் இந்த மலையேற்றம் சிறப்பான அனுபவத்தை தரக்கூடும்.

Image Source: instagram-com/nikhil-raghunathan

டால்பின் நோஸ், கொடைக்கானல்

இது கொடைக்கானலில் இருக்கும் அழகிய மலையேற்றமாகும். மரங்கள் சூழப்பட்டுள்ள பாதையில் சுமார் 8 கி.மீ பயணித்தால் டால்பின் மூக்கு வடிவத்தில் இருக்கும் பாறையை காணலாம். அங்கிருந்து கொடைக்கானல் மலையின் பிரம்மிப்பூட்டும் காட்சியை கண்டு ரசிக்கலாம்

Image Source: pexels-com

குத்ரேமுக், கர்நாடகா

தெற்கின் இமயமலை என்று அழைக்கப்படும் குத்ரேமுக் சிகரம், பசுமையான காடுகள் மற்றும் நீர்வீழ்ச்சி என பிரமிக்க வைக்கும் காட்சியைக் கொண்டுள்ளது. இந்த மலையேற்றம் சற்று சவாலானதாக இருக்கும். தினமும் 50 பேர் மட்டும் மலையேற வனத்துறையினர் அனுமதிக்க செய்கின்றனர்

Image Source: instagram-com/mtkinetics

ஏற்காடு, தமிழ்நாடு

இது கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். இப்பகுதி காடுகள், காபி தோட்டங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர்பெற்றது. ஏற்காடு சிகரம் மிதமான மலையேற்றம் என்பதால் சாகச ஆர்வலர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் செல்லலாம்

Image Source: instagram-com/tehijacob

நாகலாபுரம் மலை, ஆந்திரா

அடர்ந்த காடுகள் வழியாக செல்லும் இந்த 13 கி.மீ மலையேற்றத்தை முடித்திட குறைந்தது ஒரு நாள் ஆகும். மலைகளில் உள்ள நீர்வீழ்ச்சி ட்ரெக்கிங் பயணத்தின் ஹைலைட் விஷயமாகும். இதுதவிர, பாறைகள் அடங்கிய அழகிய பள்ளத்தாக்குகளும் காண முடியும்

Image Source: instagram-com/vickys_jaunts

செம்ப்ரா, கேரளா

வயநாட்டில் அமைந்துள்ள செம்ப்ரா சிகரம், மலையேற்ற ஆர்வலர்களின் ஹாட்ஸ்பாட் ஆகும். இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2,100 மீட்டர் உயரத்தில் உள்ளது. வனவிலங்குகள் அச்சுறுத்தல் இருப்பதால், இரவு முழுவதும் தங்கிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Image Source: instagram-com/zostel

குடசாத்ரி, கர்நாடகா

இந்த ட்ரெக்கிங் பாதை சற்று சவாலானதாக இருக்கக்கூடும். சுமார் 13 கி.மீ தூரத்தை கடக்க குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் ஆகும். குடசாத்ரி உச்சியில் இருந்து அரபிக்கடலின் அழகிய காட்சியை கண்டு ரசிக்கலாம். இங்கு தங்க விரும்பினால், வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்

Image Source: instagram-com/tripbaecommunity

மீசைப்புலிமலை, கேரளா

இந்த அழகிய மலையேற்றம், மூணாறில் இருந்து 24 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2640 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதன் மொத்த பயண தூரம் 15 கி.மீ., ஆகும். இதை முடித்திட 9 மணி நேரம் ஆகக்கூடும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் உள்ளது

Image Source: instagram-com/surajvaiga

Thanks For Reading!

Next: பட்ஜெட்டில் சுற்றிப் பார்க்க சிறந்த 8 நாடுகள் இதோ!

[ad_2]