[ad_1] தென் கொரியா 'சியோல்' நகரில் பார்க்க வேண்டிய அழகான இடங்கள்

May 14, 2024

தென் கொரியா 'சியோல்' நகரில் பார்க்க வேண்டிய அழகான இடங்கள்

Anoj

சியோல்

தென் கொரியாவின் தலைநகராக சியோல் நகரம் திகழ்கிறது. அங்கு சுற்றுலா செல்கையில், நீங்கள் மிஸ் செய்யக்கூடாத இடங்களை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்

Image Source: unsplash-com

Cheonggye Plaza

இது சியோல் நகரின் மையப்பகுதியில் Cheonggyecheon நீரோடையின் ஆரம்பத்தில் அமைந்திருக்கும் பூங்கா ஆகும். இங்கு நீர்வீழ்ச்சி, நீரூற்றுகள் மற்றும் வசதியான நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது தென் கொரியா மக்கள் ரிலாக்ஸிங் ஸ்பாட்டாகும்

Image Source: unsplash-com

Gangnam Street

இது சியோல் நகரின் மிகவும் பரபரப்பான சாலை என சொல்லலாம். ட்ரெண்டி ஷாப்ஸ், ஆடம்பரமான உணவகங்கள் மற்றும் சிறப்பான நைட் லைப் அனுபவிக்கும் வாய்ப்பை அளிக்கிறது. இரவு நேரத்தில் சாலை முழுவதும் விளக்கு வெளிச்சத்தால் பிரகாசமாக காட்சியளிக்கும்

Image Source: unsplash-com

Gyeongbokgung Palace

இந்த அரண்மனை, சியோலின் ஐந்து அரச அரண்மனைகளில் மிகப்பெரியது ஆகும். ஜோசோன் வம்சத்தினரால் கட்டப்பட்ட இந்த அரண்மனை, கொரிய கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாகும். மாளிகையை சுற்றிலும் அழகிய தோட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Image Source: instagram-com/chrisbg

Han River

இந்த நதி தென் கொரியா வரலாற்றில் மிக முக்கியமான பங்கை கொண்டுள்ளது. மாலை நேரங்களில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட மக்கள் ஒன்றுகூட செய்வார்கள். இதுதவிர, இரவில் லைட் ஷோவும் அரங்கேறக்கூடும்

Image Source: unsplash-com

Itaewon

இது சியோலில் மிகவும் பிரபலமான சுற்றுப்புறங்களில் ஒன்றாகும். இரவு வாழ்க்கை மற்றும் ஆடம்பர உணவகங்கள் என வெளிநாட்டினருக்கு ஏற்ற இடமாக கருதப்படுகிறது

Image Source: unsplash-com

Myeongdong

இது சியோலின் ஷாப்பிங் ஸ்பாட் ஆகும். இங்கு வரிசையாக நிரம்பியிருக்கும் கடைகளில், ட்ரெண்டியான மற்றும் அழகான ஆடை, அணிகலன்களை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், Korean BBQ முதல் Japanese ramen வரை, பல வகையான உணவுகளையும் ருசி பார்க்கலாம்

Image Source: unsplash-com

Namsan Cable Car

சியோலின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை காண நாம்சன் கேபிள் காரில் சவாரி செய்யுங்கள். உள்ளூர் வாசிகள் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரை அனைவரும் தவறாமல் விசிட் செய்யும் இடமாகும். காலை 10 மணி முதல் இரவு 10.30 வரை டவருக்கான கேபிள் கார் ரைடு வசதி இருக்கும்

Image Source: unsplash-com

Bukchon Hanok Village

இந்த கிராமம், அரண்மனைகள் மற்றும் கோவில்களுக்கு இடையில் அமைந்துள்ளது. Hanok என அழைக்கப்படும் நூற்றுக்கணக்கான பழைய கொரிய வீடுகள் நிரம்பியிருக்கும் இந்த அழகிய சுற்றுப்புறம், ஏராளமான கொரிய நாடகங்களில் இடம்பெற்றுள்ளன.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: முகலாயர் வரலாற்றை அறிய இந்த இடத்திற்கு செல்லுங்கள்!

[ad_2]