May 15, 2024
நாம் கடைப்பிடிக்கும் டயட் வழக்கங்களில் பல தற்போது காலாவதியாகி விட்டதாகவும், வழக்கத்தில் இல்லை எனவும் நிபுணர்கள் குறிப்பிடும் நிலையில், அந்த சில டயட் வழக்கங்கள் பற்றி இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
பலரும் சாப்பிடும் உணவில் கலோரிகளை கணக்கு வைத்து சாப்பிட்டு வருவார்கள். இதற்கு பதிலாக நீங்கள் உட்கொள்ளும் உணவு முழு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளாக இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Image Source: istock
ஒரு நாளைக்கு வெறும் 100 கலோரிகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது உண்மை அல்ல. இப்படி செய்து வருவதால் நம் உடலுக்கு போதுமான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Image Source: istock
நாள் ஒன்றுக்கு ஒருவேளை உணவு சாப்பிட்டு வரும் ஒரு உணவு டயட் வழக்கம் உடலுக்கு கிடைக்க வேண்டிய போதுமான ஊட்டச்சத்துக்களை தடுக்கிறது. பல்வேறு பக்க விளைவுகளை கொண்ட இந்த டயட் வழக்கத்தை இன்னும் பலர் கடைபிடிக்கின்றனர் என்பது வேதனை!
Image Source: istock
சமீப காலமாக ட்ரெண்டாகி வரும் ஒரு டயட் முறை இந்த தண்ணீர் டயட். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை உணவு எதுவும் உட்கொள்ளாமல் தண்ணீர் அல்லது ஜூஸ்கள் குடித்து வருவது தான் இந்த டயட் முறை. இது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
Image Source: pexels-com
நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஒரு உணவு முறை இந்த டீடாக்ஸ் டயட். இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்றாலும் உடல் எடை குறைய எந்த விதத்திலும் உதவாது.
Image Source: istock
ஒரு சிலர் உடல் எடையை வேகமாக குறைக்க சப்ளிமெண்ட்ஸ் சாப்பிட்டு வருவது உண்டு. இது நாளடைவில் உடல் எடை குறைக்க உதவினாலும் பிற்காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
Image Source: istock
உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி முக்கியம் என்பது போல உணவு டயட் முறை மிகவும் முக்கியம். ஆனால் நாம் உட்கொள்ளும் உணவுகளில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் நார்ச்சத்து புரதச்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Image Source: istock
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஒரு சில நபர்கள் குறிப்பிட்ட இந்த டயட் வழக்கங்களை மருத்துவ ஆலோசனை இன்றி பரிசோதிக்கின்றனர். நிபுணர்கள் கூற்றுப்படி டயட் முறையை துவங்கும் முன் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெறுவது நல்லது.
Image Source: istock
Thanks For Reading!