May 9, 2024
BY: Anojகோடை காலத்தில் தினமும் ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட வேண்டுமென குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தோன்றக்கூடும். இந்தப் பதிவில், தேங்காய் பாலை கொண்டு எப்படி ஐஸ்கிரீம் செஞ்சி சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்
Image Source: istock
தேங்காய் பால் - 5 கப்; தேங்காய் - 1 கப்; சர்க்கரை - 1 கப்; சோள மாவு - சிறிதளவு; பிரஷ் கிரீம் - 1 கப்
Image Source: istock
முதலில் தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துகொள்ளவும்
Image Source: istock
அடுத்து, ஒரு பவுலில் நறுக்கிய தேங்காய், சோள மாவு மற்றும் 1 கப் தேங்காய் பால் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
Image Source: pexels-com
இப்போது, அடுப்பில் பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றி கொதிக்கவிடவும். பால் கொதித்தும் சர்க்கரையை சேர்த்து கிளற வேண்டும்
Image Source: istock
பிறகு, ஏற்கனவே மிக்ஸ் செய்துள்ள தேங்காய் பால் - சோள மாவு கலவையை சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து அணைத்துவிடவும்
Image Source: istock
கலவையை மிக்ஸி ஜாருக்கு மாற்றிவிட்டு பிரஷ் கிரீம் சேர்த்து அரைத்துகொள்ளவும்
Image Source: istock
இந்த கலவையை பவுலுக்கு மாற்றி, குளிரூட்ட பிரிட்ஜில் வைத்துவிட வேண்டும்
Image Source: istock
சுமார் 6 மணி நேரம் கழித்து பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்தால், கலவை ஐஸ்கிரீம் பதத்தில் சூப்பராக இருக்கக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!