[ad_1] ‘தேங்காய் பால் சந்தகை’ - எப்படி செய்வது தெரியுமா?

May 24, 2024

‘தேங்காய் பால் சந்தகை’ - எப்படி செய்வது தெரியுமா?

mukesh M

தேங்காய் பால் சந்தவை!

கிராமத்து ஸ்டைல் சந்தவை-னை தேங்காய் பால் சேர்த்து மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

அரிசி - 2 கப் | தேங்காய் பால் - 1 கப் | தக்காளி - 2 | கடுகு - ½ ஸ்பூன் | கறிவேப்பிலை - 1 கொத்து | பூண்டு பல் - 4 | வெங்காயம் - 1

Image Source: istock

தேவையான பொருட்கள்!

கடலை பருப்பு - 1 ஸ்பூன் | காய்ந்த மிளகாய் - 2 | பெருங்காயம் - 1 சிட்டிகை | எண்ணெய், உப்பு - தேவையான அளவு | கொத்த மல்லி - 1 கொத்து

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட அரிசியை நன்கு அலசி சுத்தம் செய்து பின் போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 2

6 மணி நேரத்திற்கு பின் இந்த அரிசியை வடிகட்டி மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின் இதனுடன் தேங்காய் பால், உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

பின் இந்த மாவினை இட்லி அவித்து எடுப்பது போன்று இட்லி சட்டியில் சேர்த்து, பூ போல் அவித்து எடுத்துக்கொள்ளவும். இட்யின் சூடு ஆறுவதற்குள், இடியாப்ப குழாயில் சேர்த்து புழிந்து எடுத்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

இதனிடையே எடுத்துக்கொண்ட தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி தனித்தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

தற்போது சந்தவை தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, கறிவேப்பிலை, கடலை பருப்பு, உளுந்து, வெங்காயம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

Image Source: istock

சந்தவை ரெடி!

பின் இதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதங்க காத்திருக்கவும். இறுதியாகி இதனுடன் இடியாப்பாமாக புழிந்த இட்லி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்க, தேங்காய்பால் சந்தவை ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: ராஜஸ்தான் ஸ்டைலில் 'வெங்காய கூட்டு' செய்வது எப்படி?

[ad_2]