Aug 10, 2024
தமிழ் திரைப்படத்தில் இசையமைத்தமைக்காக தேசிய விருது வென்ற இசையமைப்பாளர்கள் யார்? இவர்கள் இசையமைத்த திரைப்படம் என்ன? என்பது குறித்து சற்று விரிவாக இங்கு நாம் காணலாம்!
Image Source: x-com
கிருஷ்ணன்கோயில் வெங்கடாசலம் மகாதேவன் எனும் KV மகாதேவன் அவர்கள், 1967-ஆம் ஆண்டு வெளியான கந்தன் கருணை எனும் திரைப்படத்தில் இசையமைத்ததற்காக தேசிய விருது பெற்றார்!
Image Source: x-com
இசைஞானி இளையராஜா அவர்கள், 1985-ஆம் ஆண்டு நடிகர் சிவக்குமார், சுகாசினி நடிப்பில் வெளியான சிந்து பைரவி மற்றும் 2016-ஆம் ஆண்டு வெளியான தாரை தப்பட்டை திரைப்படம் என இரண்டு தேசிய விருதுளை வென்றுள்ளார்!
Image Source: x-com
தமிழ் திரைப்படங்களை தவிர்த்து சாகர சங்கமம் (1983), ருத்ரவீணை (1988) எனும் தொலுங்கு மொழி திரைப்படத்திற்கும், பழசி ராஜா (2009) எனும் மலையாள திரைப்படத்திற்கும் என மொத்தம் 5 தேசிய விருதுகளை இளையராஜா பெற்றுள்ளார்.
Image Source: x-com
1992-ஆம் ஆண்டு வெளியான ரோஜா; AR ரஹ்மான்-க்கு முதல் தேசிய விருதை பெற்று தந்தது. தொடர்ந்து மின்சார கனவு (1996), கன்னத்தில் முத்தமிட்டால் (2002) மற்றும் காற்று வெளியிடை (2017) என மொத்தம் 4 தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது வாங்கினார்.
Image Source: instagram-com
தமிழ் திரைப்படங்களை தவிர்த்து 2001-ஆம் ஆண்டு வெளியான லகான், 2017-ஆம் ஆண்டு வெளியான MOM திரைப்படங்களும் ரஹ்மானுக்கு தேசிய விருது பெற்று தந்தன!
Image Source: x-com
நடிகை அதிதி ராவ் தமிழில் அறிமுகமான திரைப்படம் சிருங்காரம். 1920-களில் நடப்பது போன்ற திரைக்கதை கொண்ட இத்திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளர் லால்குடி ஜெயராம் தேசிய விருது வென்றார்!
Image Source: x-com
நடிகர் அஜித் - நயன்தாரா நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இசையமைப்பாளர் D இமான் தேசிய விருது பெற்றார்!
Image Source: x-com
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இசையமைப்பாளர் GV பிரகாஷ் அவர்கள் தேசிய விருது வென்றார்!
Image Source: x-com
Thanks For Reading!