May 6, 2024
பொதுவாக தேனிலவு என்றாலே எதாவது குளு குளு கிளைமேட் இடங்களுக்கு செல்வது வழக்கம். குளிர் அதிகமான இடங்களுக்கு செல்லும் போது நம்முடைய சரும பராமரிப்பிலும் சில டிப்ஸ்களை பின்பற்ற வேண்டியது அவசியம். அதைப் பற்றி இங்கு விரிவாக காணலாம்
Image Source: pexels-com
கோடை காலம் என்றால் சன்ஸ்க்ரீன் SPF 30 யை மறக்காமல் பயன்படுத்துங்கள். விமானத்திற்கு புறப்படுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு இதை அப்ளை செய்து கொள்ளுங்கள். சுற்றிப் பார்க்க வெளியே செல்லும் போதும் சன்ஸ்க்ரீனை அப்ளை செய்யுங்கள்.
Image Source: istock
கண்ணாடி, ஸ்கார்ப் மற்றும் பெரிய தொப்பியை உடன் எடுத்துச் செல்லுங்கள். இது சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தை காக்க உதவுகிறது.
Image Source: pexels-com
நீங்கள் பனியால் சூழ்ந்த இடங்களுக்கு சென்றால் சன்ஸ்க்ரீன் மற்றும் சன்ஸ்க்ரீன் லோசனை உங்கள் ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளுங்கள். அதை அடிக்கடி எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
Image Source: pexels-com
விமான பயணத்தில் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். ஆல்ஹகால் குடிப்பதை தவிருங்கள். சன்னலோர இருக்கைகளில் அமர்வதால் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சு உங்களை பாதிக்கலாம்.
Image Source: istock
நீங்கள் கடற்கரைக்கு செல்ல நேர்ந்தால் உப்பு நீரை தவிருங்கள். இது உங்கள் சருமத்தை வறண்டு போகச் செய்யலாம். சன்ஸ்க்ரீன், தொப்பி, சன் கிளாஸ்களை மறக்காமல் உடன் எடுத்துச் செல்லுங்கள்.
Image Source: pexels-com
உங்கள் காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். 5 வகை பழங்கள், பழச்சாறுகள், குறைந்த சர்க்கரை பொருட்கள், சாக்லேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான தின்பண்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: pexels-com
சுற்றுலா அல்லது தேனிலவு செல்லும் போது அங்குள்ள லோக்கல் கடைகளில் டாட்டூ போடாதீர்கள். இது உங்களுக்கு சரும தொற்று அல்லது சரும பிரச்சனைகளை உண்டாக்க நேரிடலாம்.
Image Source: pexels-com
வெளியிடங்களுக்கு செல்லும் போது பூச்சி கடி, ஒவ்வாமை, தலைவலி, சளி, குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே முடிந்த வரை உங்களுக்கு தேவையான மருந்துகளை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!