[ad_1] தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் ‘ஹோம்மேட் வேக்ஸ்’!

Jun 6, 2024

தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் ‘ஹோம்மேட் வேக்ஸ்’!

mukesh M

ஹோம்மேட் வேக்ஸ்!

சருமத்தில் காணப்படும் தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் வேக்ஸ் ஒன்றினை சர்க்கரை, எலுமிச்சை மற்றும் தேன் கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

சர்க்கரை - 7 ஸ்பூன் | எலுமிச்சை - 1 | தேன் - 2 ஸ்பூன்

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி சாறு புழிந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 2

தற்போது சிறிய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து (மிதமான சூட்டில்) சர்க்கரை பாகு தயார் செய்யவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

பின் இதனுடன் தேன் மற்றும் தண்ணீர் அரை கப் அளவுக்கு சேர்த்து 5 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்க ‘ஹோம்மேட் வேக்ஸ்’ ரெடி!

Image Source: istock

எப்படி பயன்படுத்துவது?

தயாராக உள்ள இந்த வேக்ஸ் ஜெல்லினை சருமத்திற்கு அப்ளை செய்து, வழக்காமான வேக்ஸ் ஸ்ட்ரிப் பயன்படுத்தி தேவையாற்ற முடிகளை அகற்றவும்.

Image Source: istock

வெதுவெதுப்பான நிலையில் பயன்படுத்துங்கள்!

சருமத்தில் இந்த வேக் ஜெல் பயன்படுத்தும்போது வேக்ஸ் ஜெல் ஆனது அதிகம் சூடாக இல்லாமல் வெதுவெதுப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்!

Image Source: istock

பயன்படுத்துவதற்கு முன்!

சருமத்தில் இந்த வேக்ஸ் ஜெல் பயன்படுத்தும் முன் டால்கம் பவுடர் அப்ளை செய்ய மறந்துவிடாதீர்கள்.

Image Source: istock

பயன்படுத்திய பின்?

தேவையற்ற முடிகளின் மிது இந்த ஜெல்லினை பயன்படுத்தி முடிகளை அகற்றிய பின்னர் சருமத்திற்கு கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்துவிட மறவாதீர்கள்!

Image Source: istock

Thanks For Reading!

Next: பளபளப்பான சருமத்தை பெற 'ஜான்வி கபூர்' பின்பற்றும் பேஸ் பேக்!

[ad_2]