Jul 18, 2024
BY: Anoj, Samayam Tamilதோசை சுடுவது என்பது ஒரு கலை. அனைவருக்கும் மொறு மொறுவென நிலா மாதிரி வட்டமாக சுடனும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நமக்கு வருவதோ பிய்ஞ்சு தோசை மட்டும் தான். ஆனால் நீங்கள் கீழ்க்கண்ட டிப்ஸ்களை பின்பற்றினால் மொறு மொறுவென தோசை சுடலாம்.
Image Source: pexels-com
தோசை சரியாக வராமல் இருப்பதற்கு தோசை மாவின் பதமும் ஒரு முக்கிய காரணம். மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது தண்ணீயாகவோ இருந்தால் தோசை வராது. எனவே தோசை மாவு முதலில் சரியான பதத்தில் இருக்க வேண்டும்.
Image Source: istock
மென்மையான பஞ்சு போன்று தோசையை வார்ப்பதற்கு மாவு புளிக்க வேண்டியது மிகவும் அவசியம். 8-12 மணி நேரம் மாவு நன்றாக புளிக்க வேண்டும். புளித்த மாவு நுரையாகவும் நன்றாக பொங்கி வர வேண்டும்.
Image Source: istock
தோசை சரியாக வருவதற்கு தோசைக் கல்லில் மாவை சரியாக ஊத்த வேண்டும். நீங்கள் சரியாக ஊத்தாவிட்டால் அது ஒண்ணு போல் வேகாது. எனவே மாவை சமமாக பரப்ப வேண்டும்.
Image Source: istock
தோசை சுடும் போடு அடுப்பை குறைந்த தீயில் வைத்தாலோ அல்லது அதிக தீயில் வைத்தாலோ தோசை கருக வாய்ப்பு உள்ளது.. எனவே அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
Image Source: istock
தோசை வேகுவதற்குள் தோசையை உடனடியாக மாற்றி போடக் கூடாது. உடனடியாக திருப்பி போட்டால் தோசை கிழிந்து போக வாய்ப்பு உள்ளது. அல்லது தவாவில் அப்படியே ஒட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
Image Source: istock
தோசையை மெல்லியதாக ஊற்றாமல் தடினமாக ஊற்றினால் தோசையை மடிப்பது மிகவும் கடினமாகும். எனவே மெல்லியதாக ஊற்றினால் பேப்பர் ரோஸ்ட் மாதிரி அழகாக சுருட்டலாம்.
Image Source: istock
நான் ஸ்டிக் தவாவில் தோசை சுடும் போது தோசை ஒட்டாமல் வரும். இதன் மூலம் மாவை எளிதாக பரப்ப முடியும்.
Image Source: istock
தோசை சுடுவதற்கு சற்று நேரம் முன்பு மாவில் உப்பு சேருங்கள். இதன் மூலம் மாவு விரைவில் புளிப்பதை தடுக்க முடியும். இதுதவிர, தோசை சுடுவதற்கிடையில் ஈரத்துணியைக் கொண்டு தவாவை துடைத்து எடுங்கள். இதன் மூலம், எஞ்சியிருக்கும் மாவு மற்றும் எண்ணெயை நீக்க முடியும்
Image Source: istock
Thanks For Reading!