Aug 19, 2024
By: Nivethaஎந்தவொரு மனிதனும் தனது வாழ்வில் தோல்வி என்பதை சந்திக்காமல் இருப்பது இல்லை. தோல்வியடைவது சாதாரணம் தான், அதிலிருந்து நாம் ஓர் பாடத்தை கற்றுக்கொண்டு வெற்றி நோக்கி அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டுமே தவிர, தோல்வியை நினைத்து அதிலயே மூழ்கிவிட கூடாது.
Image Source: pexels
ஒரு சிலருக்கு எடுத்தவுடன் வெற்றி கிடைத்து விடும், ஆனால் அந்த வெற்றியே அவர்களது மனதில் ஓர் அசாதாரண அதிகப்படியான நம்பிக்கையை உருவாக்கி அடுத்த முயற்சியில் அவர்களை முழு ஈடுபாடு செலுத்தவிடாமல் அகந்தை காரணமாக தோல்வியடைய செய்து விடும்.
Image Source: pexels
எனவே தான் எவ்வளவு பெரிய வெற்றி கிட்டினாலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள். வெற்றியில் நாம் எதனையும் பெரிதாக கற்றுக்கொள்வதில்லை ஆனால் தோல்வி நமக்கு பல விஷயங்களை கற்று கொடுக்கும்.
Image Source: pexels
நம் வாழ்வில் தோல்வி வரும் தான், அந்த நேரத்தில் கோவம்,வெறுப்பு, ஆவேசம் எதுவுமின்றி அன்போடு அணுகுங்கள். பாசிட்டிவாக இருந்தால் வெற்றி நம்மை தேடி வரும், ஆனால் முக்கியமான குறிப்பு என்னவென்றால் வெற்றியை சரியாக கவனிக்கவில்லை எனில், வீழ்ச்சிக்கு அது விதையாகிவிடும். எனவே சரியான முறையில் வெற்றியை கையாளுவது என்பது மிக முக்கியம்.
Image Source: pexels
இந்த உலகில் எதுவுமே நமக்கு நிரந்தரமில்லை. அதனால் நமது மனோபாவத்தை நாம் மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் இப்பிரபஞ்சத்தில் வெற்றி பாதையில் நம்மை ஐக்கியமாக்கி கொள்ளலாம். அதுவே நம்மை தோல்வியில் இருந்து மீட்டெடுத்து வெற்றி பாதையில் அழைத்து செல்லும்.
Image Source: pexels
நீங்கள் வேலையின்றி இருக்கும் சூழலில் பல வேலைக்கான நேர்காணலுக்கு சென்று திரும்ப வர நேரிடும். அப்போது வேலை கிடைக்கவில்லை என்று சோர்ந்து அடுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை என்றாலும், நேர்காணலில் ஒழுங்காக பதில் கூறாமல், கோவத்தை வெளிப்படுத்தினாலோ மீண்டும் மீண்டும் நாம் சந்திக்க நேருவது தோல்வியாக தான் இருக்கும்.
Image Source: pexels
அதுவே நாம் நேற்றைய நிராகரிப்பை மறந்து இன்றைய வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி முயற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வெற்றி நம்மை தேடி வரும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதே அதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Image Source: pexels
எந்தவொரு செயலையும் நாம் செய்து முடித்தவுடன் அதில் வெற்றி காண வேண்டும் என்று எண்ணக்கூடாது. அதற்கான கால அவகாசம் என்று ஒன்று உள்ளது, அதற்கான நேரம் வரும் வரை வெற்றிக்காக நாம் காத்திருக்க தான் வேண்டுமே தவிர, தோல்வியை கண்டு ஒரு ஓரமாக உட்கார கூடாது.
Image Source: pexels
நீங்கள் எவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்தாலும் வெற்றி குறித்தே நினையுங்கள். தோல்வியில் இருக்கும் வேதனையை விட வெற்றியில் இருக்கும் ஆனந்தம் ஓர் பேரானந்தம் தான். அது குறித்து நாம் நினைக்கையில் நிச்சயம் வெற்றியை நம்மால் காண முடியும்.
Image Source: pexels
Thanks For Reading!