Jul 26, 2024
West Nile Virus - அடிப்படையில் பறவைகளை தாக்கும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். அதேநேரம், இந்த வைரஸ் தாக்கப்பட்ட கொசு மனிதர்களை கடித்தால் இது மனிர்களுக்கும் பரவும்!
Image Source: istock
1937-ஆம் ஆண்டு மேற்கு நைல் (West Nile) பகுதியான உகாண்டாவில் தான் இந்த வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இதன் காரணமாக இந்த வைரஸுக்கு West Nile Virus என பெயரிடப்பட்டது!
Image Source: istock
அரிதான சமயங்களில் உயிர் பலி கேட்கும் இந்த கொடி வைரஸ், ஆரம்பத்தில் மூளை தண்டுவடத்தை பாதிக்கிறது. பின், படிப்படியாக உடலின் மற்ற பகுதிகளை தாக்கி - உடல் இயக்கத்தை மட்டுப்படுத்துகிறது!
Image Source: istock
தகவல்கள் படி இந்த வைரஸ் தொற்று கொண்டிருக்கும் நபர்களில் 20% பேருக்கு மட்டுமே அறிகுறிகள் தென்படுகிறது. இந்த சொற்ப அளவிலான மக்களும் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, வாந்தி - பேதி போன்ற இயல்பு நிலை அறிகுறிகளை மட்டுமே சந்திக்கின்றனர்!
Image Source: istock
நாளடைவில் இந்த அறிகுறிகள் நரம்பு மண்டல பிரச்சனைகளாக உருவெடுத்து நரம்பு முடிச்சுகள், தசைகள் தளர்வடைதல், கழுத்து பகுதியில் இருக்கம், பக்கவாதம் - வலிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது!
Image Source: pexels-com
முன்பு குறிப்பிட்டது போல் இந்த வைரஸ் தொற்று ஆனது, கொசு கடியால் மனிதர்களுக்கு பரவுகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுவது தொடர்பான ஆதாரங்கள் இதுவரை இல்லை!
Image Source: istock
West Nile Virus தொற்றுக்கு பிரத்தியேக சிகிச்சை முறை ஏதும் இல்லை. தொற்று பாதிக்கப்பட்ட நபர், தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்ள மருத்துவ கண்காணிப்பில் இருப்பது நல்லது!
Image Source: istock
இந்த West Nile Virus-க்கு பிரத்தியேக சிகிச்சை முறைகள் ஏதும் இல்லாத நிலையில், கொசுக்களிடம் இருந்து தப்பித்து இந்த கொடிய West Nile Virus தொற்றில் இருந்து உங்களை தற்காத்துக்கொள்வதே நல்லது!
Image Source: istock
உங்கள் சுற்றுப்புறத்தில் கொசு தங்குவதற்கான வாய்ப்புகளை குறைக்கவும். கொசு விரட்டி செடிகள், மருந்துகள், கொசு வலை போன்றவைற்றை பயன்படுத்தி கொசுக்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்யலாம்!
Image Source: istock
Thanks For Reading!