Anoj
Apr 30, 2024
கால்ஷீட் பிரச்சனை, படப்பிடிப்பு தாமதம் அல்லது பிற தனிப்பட்ட காரணங்களால் நடிகர் அஜித் நிராகரித்த சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. அந்த படங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/shaliniajithkumar2022
1997ல் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் முதலில் அஜித், விஜய் தான் நடிக்கவிருந்தனர். ஆனால், கால்ஷீட் பிரச்சனையால், படப்பிடிப்பு தொடங்கி 18 நாட்கள் ஆன நிலையில், அஜித் விலகுவதாக முடிவெடுத்தார். பிறகு, அந்த ரோலுக்கு சூர்யா தேர்வு செய்யப்பட்டார்
Image Source: facebook-com/ajith360
லிங்குசாமி இயக்கிய ரன் திரைப்படம், மாதவன் திரை பயணத்திற்கு திருப்பு முனையாக அமைந்தது. இந்த கதையை முதலில் அஜித்துக்கு தான் கூறியுள்ளனர். ஆனால், ஆக்ஷன் காட்சிகள் சரியாக வருமா என்கிற குழப்பத்தில் அஜித் நிராகரித்ததாக கூறப்படுகிறது
Image Source: twitter-com/kaviraj33977015
நடிகர் பிரசாந்தின் ஆல் டைம் ஃபேவரைட் படமாக ஜீன்ஸ் திகழ்கிறது. அதுதான் அச்சமயத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதில் நடிப்பதற்கான வாய்ப்பை, கால்ஷீட் காரணமாக நடிகர் அஜித் நிராகரித்துள்ளார்
Image Source: twitter-com/kollysodaa
பாலா இயக்கிய நான் கடவுள் படத்தின் ஹீரோவாக அஜித் தான் தேர்வு செய்யப்பட்டார். அந்த ரோலுக்காக அஜித் நீளமாகவும் முடி வளர்க்க செய்தார். ஆனால், படப்பிடிப்பு தாமதம் மற்றும் வேறு சில காரணங்களால் படத்தில் இருந்து வெளியேறினார்.
Image Source: twitter-com/nikhilpoojary01
நடிகர் விக்ரமின் பிளாக் பஸ்டர் திரைப்படமான ஜெமினியில் நடிக்கும் வாய்ப்பையும் அஜித் தவறிவிட்டார். படத்தில் வரக்கூடிய கதாபாத்திரத்தின் ரோல் தனக்கு செட் ஆகாது என கூறி அஜித் நோ சொன்னதாக சொல்லப்படுகிறது
Image Source: twitter-com/avmproductions
நடிகர் அஜித் தவறவிட்ட மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படம் கஜினி. இந்தப் படம் 2004ல் மிரட்டல் என்கிற பெயரில் அறிவிக்கப்பட்டது. அதில் அஜித் லீட் ரோலில் நடிப்பதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால், போட்டோ ஷூட் முடிந்த பிறகு அஜித் விலகுவதாக அறிவித்தார்
Image Source: instagram-com/thememusictamil
சூர்யாவின் 'காக்க காக்க' திரைப்படம் வசூலில் சாதனை புரிந்தது. இதில் நடித்திட முதலில் விஜய் மறுப்பு தெரிவித்த நிலையில், அஜித்தை கௌதம் மேனன் அணுகியுள்ளார். ஆனால், கதையில் சில மாற்றங்களால் அஜித்தால் நடிக்க முடியாமல் போகியுள்ளது
Image Source: twitter-com/jishnu___offl
லவ் டூடே, விஜய் சினிமா கேரியரில் முக்கியமான படமாகும். இந்த படத்தின் கதை முதலில் அஜித்திடம் கூறப்பட்டுள்ளது. ஆனால், படத்தின் கதை பிடிக்காததால் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்
Image Source: twitter-com/actorvijayteam
Thanks For Reading!