Jul 27, 2024
நடிகர் தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் ‘ராயன்’. சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இத்திரைப்படம் தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்!
Image Source: instagram-com
ராயன் திரைப்படம் நடிகர் தனுஷின் நடிப்பில் (நாயகனாக நடித்து) வெளியாகும் 50-வது திரைப்படம் ஆகும்.
Image Source: x-com/dhanushkraja
ராயன் திரைப்படத்தை நடிகர் தனுஷ் எழுதி - இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக 2017-ஆம் ஆண்டு ப. பாண்டி திரைப்படத்தை இயக்கிய தனுஷுக்கு, இயக்குனராக இது 2-வது திரைப்படம்!
Image Source: x-com/dhanushkraja
ராயன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தவிர்த்து SJ சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சந்தீப் கிசன், காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி சரத் குமார், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது!
Image Source: x-com/dhanushkraja
ராயன் திரைப்படம் ஆனது முதலில் தமிழ் - தெலுங்கு இரட்டை மொழி (Bilingual) திரைப்படமாக திட்டமிடப்பட்டது. தெலுங்கு பதிப்பில் நாகர்ஜுனா, அதிதி ராவ், சரத் குமார் உள்ளிட்டோர் நடிக்கவிருந்தனர், பின் ஒரு சில காரணங்களால் இத்திட்டம் கைவிடப்பட்டது!
Image Source: x-com/dhanushkraja
இருப்பினும் இத்திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது, இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு, தமிழ் மொழி திரைப்படம் வெளியான அதே தேதியில் ஒன்றாக வெளியிடப்பட்டது.
Image Source: x-com/dhanushkraja
ராயன் திரைப்படத்திற்கு AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராஞ்சனா (2013), மரியான் (2013), அட்ராங்கி ரே (2021) திரைப்படத்திற்கு பின் 4-வது திரைப்படமாக இந்த ஜோடி ராயன் திரைப்படத்தில் இணைகிறது!
Image Source: x-com/dhanushkraja
ராயன் திரைப்படதில் நடிக்க வில்லனாக நடிக்க இசையமைப்பாளர் தேவா-விடம் கேட்கப்பட்டதாகவும், அவர் ஒப்புக்கொள்ள வில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதேப்போன்று நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நித்யா மேனன் இருவரும் இத்திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவிர்த்துள்ளனர்!
Image Source: x-com/dhanushkraja
வட சென்னையில் நகரும் திரைக்கதை உண்மையில் ஒரு பழிதீர்க்கும் திரைக்கதை ஆகும். அந்த வகையில் இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரை விருந்தாக அமைகிறது. ஆக்ஷன் காட்சிகளுக்காக பிரத்தியேக VFX அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன!
Image Source: x-com/dhanushkraja
Thanks For Reading!