mukesh M
May 25, 2024
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி தனது நடிப்புக்காக 4 Filmfare மற்றும் 2 SIIMA விருதுகளை வென்றுள்ளார். இந்நிலையில் அவரது நடிப்பு திறமைக்கு சான்றாய் அமைந்த ஒரு சில திரைப்படங்கள் பற்றி இங்கு காணலாம்!
Image Source: instagram-com/saipallavi-senthamarai
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரபல நடிகர் நிவின் பால் மற்றும் நடிகை சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகை சாய் பல்லவி இளைஞர்கள் மனதில் மலர் டீச்சராகவே இடம் பிடித்து விட்டார்.
Image Source: instagram-com/saipallavi-senthamarai
துல்கர் சல்மான் மற்றும் சாய்பல்லவி நடித்துள்ள மலையாள திரைப்படம் கலி. இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி அஞ்சலி என்ற ஒரு பொறுமையான மனைவியாக நடித்திருப்பார்.
Image Source: instagram-com/saipallavi-senthamarai
ஃபிடா என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹைப்பர் பில்லா பானுமதியை யாராலும் மறக்க முடியாது. வயதான தந்தையை கவனித்துக் கொள்ளும் ஒரு சுட்டி பெண்ணாக நடிகை சாய்பல்லவி இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
Image Source: instagram-com/saipallavi-senthamarai
கருக்கலைப்பு செய்ய நிர்பந்திக்கப்பட்ட ஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கும் அமானுஷ்ய விஷயங்களே இந்த தியா திரைப்படத்தின் கதை ஆகும். இந்த திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழியிலும் ஒரே நேரத்தில் வெளியானது.
Image Source: instagram-com/saipallavi-senthamarai
படி படி லெச்சே மனசு என்ற தெலுங்கு திரைப்படத்தில் கொல்கத்தாவில் வசிக்கும் ஒரு மருத்துவராக நடிகை சாய் பல்லவி நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் அவள் விரும்பும் காதலனின் குறைகளை தாண்டி அன்பு செலுத்துவார்.
Image Source: instagram-com/saipallavi-senthamarai
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படம் மாரி 2. இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராக நடித்திருப்பார்.
Image Source: instagram-com/saipallavi-senthamarai
2020-ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியான வெப் சீரிஸ் பாவ கதைகள். இந்த வெப் சீரிஸில் நடிகை சாய் பல்லவி ஒரு அப்பாவி கர்ப்பிணி பெண்ணாக நடித்திருப்பார்.
Image Source: instagram-com/saipallavi-senthamarai
தெலுங்கு பிரபல நடிகர் நானி மற்றும் நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் ஷாம் சிங்காராய். இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி கோவிலில் வாழும் தேவதாசியாக நடித்திருப்பார்.
Image Source: instagram-com/saipallavi-senthamarai
Thanks For Reading!