Jul 9, 2024
நடிப்பு துறையில் மட்டடும் அல்லாது இசை துறையிலும் மாஸ் காட்டும் தென்னிந்திய திரைப்பட நடிகைகள் ஒரு சிலர் குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: twitter-com
தமிழ், இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன். தேவர் மகன் திரைப்படத்தில் இடம்பெற்ற போற்றி பாடடி பொண்ணே எனும் பாடலில் துவங்கி, 30-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்!
Image Source: twitter-com
மலையாளர், கன்னடா, தெலுங்கு, தமிழ், இந்தி என Pan India நட்சத்திரமாக வலம் வரும் நித்யா மேனன்; பாடகியாக தனது பயணத்தை கன்னட மொழி திரைப்படத்தில் துவங்கினார். பின் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்!
Image Source: instagram-com
சூரரைப் போற்று திரைப்படத்தில் பொம்மி-யாக வந்து ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகை அபர்ணா பாலமுரளி. மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 10 பாடல்களை இதுவரை பாடியுள்ளார்!
Image Source: twitter-com
2005-ஆம் ஆண்டு வெளியான அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடலில் துவங்கி, கடந்த ஆண்டு வெளியான ஃபர்ஹானா திரைப்படத்தின் ‘ஃபர்ஹானா’ பாடல் வரை என 50-க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார்!
Image Source: twitter-com
மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் மம்தா மோகன்தாஸ் கர்நாட்டிக், இந்துஸ்தானி இசையை பயின்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்!
Image Source: twitter-com
பீட்சா, சேதுபதி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை ரம்யா நம்பீசன். பாண்டியநாடு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பை பை பை கலச்சிப்பை’ எனும் பாடல் இவர் குரலில் வெளியானதே. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50-க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார்!
Image Source: twitter-com
இமைக்கா நொடிகள், அடங்கமறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை ராஷி கண்ணா. தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிஸியா நடித்து வரும் இவர், 8-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்!
Image Source: twitter-com
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை துவங்கிய நடிகை நஸ்ரியா, ஷல்லல்லா மொபைல் திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். இறுதியாக ஆவேஷம் திரைப்படத்தின் ’ ‘ஒடிமகா’ பாடலை பாடியிருந்தார்!
Image Source: twitter-com
Thanks For Reading!