Jul 6, 2024
உடல் எடையை வேகமாக குறைத்திட ஏராளமான டிப்ஸ்களை ஃபாலோ செய்கிறோம். அவற்றில் சில பயனுள்ளதாக இருந்தாலும், பெரும்பாலானவை பயனற்றதாக இருக்கக்கூடும். அந்த வகையில், நீங்கள் ஒருபோதும் நம்பவே கூடாத எடை இழப்பு டிப்ஸ் பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: istock
காலை உணவு மெட்டபாலிசத்தை அதிகரித்து எடை இழப்புக்கு உதவும் என்றாலும், பசி எடுக்காத சமயத்தில் காலை உணவை கட்டாயத்தின் பேரில் சாப்பிட வேண்டாம். அவை எடை இழப்புக்கு அவசியம் கிடையாது. சில ஆய்வுகளில் உணவை தவிர்ப்பது கூட எடை இழப்புக்கு உதவியுள்ளது
Image Source: istock
உடல் எடையை தினமும் கண்காணிக்க வேண்டிய அவசியம் கிடையாது என சொல்வார்கள். ஆனால், இந்த பயிற்சி கலோரி எரிக்கும் வேகத்தை துரிதப்படுத்த உதவக்கூடும். நீங்கள் சரியான திசையில் தான் பயணிக்கிறீர்கள் என்னும் உந்துதலை தரக்கூடும்
Image Source: pexels-com
பெரும்பாலான ஜிம் பயிற்சியாளர்கள், உடல் எடையை குறைத்திட டீடாக்ஸ் ஜூஸ் டயட் மேற்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். இது குறுகிய கால பலனை மட்டுமே தரக்கூடும். அவற்றை நிறுத்தினால், மீண்டும் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது
Image Source: istock
கார்டியோ பயிற்சிகள் மன அழுத்தத்தை போக்கவும், உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் என்றாலும், எடை இழப்புக்கு சரியான தீர்வு கிடையாது. ஒவ்வொரு நபரை பொறுத்து கார்டியோ பயிற்சியின் எடை இழப்பு தாக்கம் மாறுபடக்கூடும்.
Image Source: istock
உடல் எடையை குறைக்க விரும்பினால், கொழுப்பு உணவுகளிடம் தள்ளி இருக்க அறிவுறுத்துவார்கள். ஆனால், அது உண்மை கிடையாது. அவகோடா, நட்ஸ் மற்றும் தேங்காய் போன்றவற்றில் இயற்கையாக காணப்படும் கொழுப்புகள் எடை இழப்பை ஊக்குவிக்க செய்கின்றன
Image Source: istock
ஒரு நாளில் 5 அல்லது 6 முறை சிறியளவில் உணவை சாப்பிடுவது மெட்டபாலிசத்தை ஊக்குவிப்பது நிஜம் என்றாலும், கலோரி நுகர்வில் மாற்றம் ஏற்படாது. இதனால் எடை இழப்பில் பெரிய மாற்றத்தை காண முடியாது
Image Source: istock
சிலர் 8 மணிக்கு மேல் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என கூறி கேள்வி பட்டிருப்போம். ஆனால், அதில் உண்மை கிடையாது. எந்த நேரம் சாப்பிட்டாலும் ஒரே கலோரி தான். நீங்கள் உட்கொள்ளும் அளவை கட்டுப்படுத்தினாலே உடல் எடை அதிகரிக்க செய்யாது
Image Source: istock
தினமும் 1 அல்லது 2 கப் காபி குடிப்பது, நீரிழிவு, இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோயை தடுப்பதாக கூறப்படுகிறது. அவற்றை குடிப்பதால் உடல் எடை இழப்பு பிராசஸ் எந்த வகையிலும் பாதிக்கப்பட செய்யாது
Image Source: istock
Thanks For Reading!