Jun 8, 2024
நரம்பு மண்டல ஆரோக்கியத்தை காத்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் எளிய யோகாசனங்கள் சிலவற்றை குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: pexels-com
Cobra Pose என பரவலாக அறியப்படும் இந்த புஜங்காசனம் ஆனது முதுகெலும்பு வலிமைக்கு வழிவகுப்பதோடு, நரம்பு மண்டல ஆரோக்கியம் காத்து மன அழுத்தம் உண்டாவதன் வாய்ப்பை குறைக்கிறது.
Image Source: istock
Tree Pose என அழைக்கப்படும் இந்த விருக்ஷாசனம் உடலின் சமநிலையை உறுதி செய்கிறது. மேலும், நரம்பு மண்டல ஆரோக்கியம் காத்து, ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கிறது.
Image Source: istock
Bridge Pose எனப்படும் சேது பந்தாசனம் ஆனது வலிமையான முதுகெலும்பு மற்றும் சீரான தோரணை பெற உதவுகிறது. மேலும், நரம்புகளின் தூண்டுகளுக்கு உதவி ஆரோக்கிய வாழ்வுக்கு உதவி செய்கிறது.
Image Source: istock
Downward - Facing Dog என அழைக்கப்படும் இந்த ‘அதோ முக சவனாசனம்’ சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. மேலும், சீரான உடல் தோரணை பெறவும் உதவுகிறது.
Image Source: istock
Mountain Pose என அழைக்கப்படும் இந்த தாடாசனம், உடலின் சமநிலையை உறுதி செய்வதோடு நரம்பு மண்டல ஆரோக்கியம் காத்து, நலமுடன் வாழ உதவி செய்கிறது.
Image Source: istock
உடல் எடையை (தொப்பையை) குறைக்கும் ஆசனங்களில் ஒன்றாக பார்க்கப்படும் பட்சிமோத்தாசனம் ஆங்கிலத்தில் Seated Forward Bend என அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம், நரம்பு மண்டல நலன் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Image Source: istock
உத்தனாசனம் - Standing Forward Bend என அழைக்கப்படும் இந்த ஆசனம் ஆனது நரம்புகள் மற்றும் தசைகளின் தளர்வுக்கு உதவி மன அமைதி காண உதவி செய்கிறது.
Image Source: istock
குழந்தைப்போல் முன்னோக்கி தவழும் இந்த பாலாசனா (Child Pose) குடல் இயக்கத்தை சீராக்குவதோடு; முதுகு பகுதி மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியம் காக்க உதவி செய்கிறது.
Image Source: istock
Thanks For Reading!