Jun 1, 2024
பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ளதால் அது வாயு மற்றும் ஆஜீரணத்தை ஏற்படுத்தும். மேலும் அதில் இருக்கும் ஒரு வகை சர்க்கரையை உடலால் முழுமையாக ஜீரணிக்க முடியாது. இது தூக்கத்தை கெடுக்கும்.
Image Source: istock
காரமான மிளகாயில் உள்ள கேப்சைசின் தொண்டை, வாய் மற்றும் இரைப்பை குழாயில் எரிச்சலை ஏற்படுத்தும். காரமான உணவுகள் உடல் வெப்பத்தை அதிகரிப்பதால் தூக்கத்தை பாதிக்கும்.
Image Source: istock
முட்டைக்கோஸில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ரஃபினோஸ் உள்ளது, இது வாயு மற்றும் உப்பசத்தை ஏற்படுத்தும். இதை இரவில் உண்பது செரிமானத்தை பாதித்து தூங்குவதை கடினமாக்கும்.
Image Source: istock
தக்காளி அமிலத்தன்மை கொண்டதால் அதை சாப்பிட்ட உடனே படுத்தால் ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். அதில் மூளை செயல்பாட்டை அதிகரிக்கும் டைரமைன் எனும் அமினோ அமிலமும் உள்ளது.
Image Source: istock
காளான் பல வகைகளில் கிடைக்கின்றன அவை குமட்டல், வாந்தி, சுவாசக்கோளாறு மற்றும் செரிமான பிரச்சனை உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது இரவில் உண்பதற்கு உகந்தது அல்ல
Image Source: istock
வெள்ளரிக்காயில் அதிக நீர் சத்து இருப்பதால் இதை இரவில் உண்பது சிறுநீர் கழிக்கும் தேவையை அதிகரித்து, இரவில் நிம்மதியான தூக்கத்தை தடை செய்யும்.
Image Source: pexels-com
உருளைக்கிழங்கு சாப்பிடுவது உடலின் மெட்டபாலிசம் மற்றும் சர்க்காடியன் சுழற்சியை பாதிக்கும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை இரவில் அதிகம் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கிறது.
Image Source: istock
கீரை போதுவாக மிகவும் ஆரோக்கியமானது என்றாலும் அதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வாயு மற்றும் உப்புசத்தை உண்டாக்கும். அதனால் இதை இரவில் உண்பது அசௌகரியத்தை ஏற்படுத்தும்
Image Source: istock
முள்ளங்கி பொதுவாகவே உடலில் வாயுவை உண்டாக்கும், மேலும் இதை சாப்பிட்டவுடன் படுப்பது உடலில் ஆங்காங்கே வாயு அடைப்பை ஏற்படுத்தி, தூக்கத்தை கெடுக்கும்.
Image Source: istock
Thanks For Reading!