Jul 25, 2024
By: mukesh Mசமூக சேவகியும் எழுத்தாளருமான சுதா மூர்த்தி அவர்களின் பார்வையில்- குழந்தை வளர்ப்பில் பெற்றோர் ஒவ்வொருவரும் கடைப்பிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று இங்கு காணலாம்!
Image Source: pexels-com
தங்கள் குழந்தை வளர்ந்து இந்த துறைக்கு தான் செல்ல வேண்டும் என பெற்றோர் ஆசைப்படுவதில் தவறு இல்லை; அதேநேரம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கனவுக்கும் மதிப்பு அளித்து அவர்களின் முன்னேற்ற பாதையில் உதவுவது அவசியம்.
Image Source: pexels-com
குழந்தை விரும்பும் தேவையற்ற விஷயங்களை பணத்தை செலவிட்டு, அவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்குவதற்கு பதில், குழந்தைகளின் பெயரில் அந்த பணத்தை முதலீடு செய்து அவர்ளின் எதிர்காலத்தை வளமாக்குவது நல்லது!
Image Source: pexels-com
குழந்தைகளுக்கு பணத்தின் புரிய வைக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அவர்கள் கேட்கும் பொருட்களை உடனடியாக வாங்கி தருவதும், நீங்கள் வாங்கி கொடுத்த பொருட்களை அவர்கள் பாழாக்கும் போது அமைதி காப்பதும் பணத்தின் மதிப்பை அவர்களின் கண்களில் இருந்து மறைக்கும்!
Image Source: pexels-com
குழந்தைகளுக்கும் - பெற்றோர்களுக்கும் இடைவெளி உண்டாக்கும் விஷயங்களை தவிர்த்திடுங்கள். குழந்தைகளை நன்கு புரிந்துக்கொள்ள மனம் விட்டு பேசுங்கள் -முடிந்தளவுக்கு நாள் ஒரு முறையேனும் அவர்களிடம் பேசுங்கள்!
Image Source: pexels-com
தொலைக்காட்சி, கைப்பேசி, டேப்லெட் என இயந்திரங்களுக்குள் மூழ்க அனுமதிக்காமல் அவர்களை புத்தகங்களோடு புதுப்பித்துக்கொள்ள அனுமதியுங்கள்!
Image Source: pexels-com
வயதில் பெரியோரின் கருத்துக்கும், வயதுக்கும் மதிப்பு அளிக்க கற்றுக்கொடுங்கள். பெரியவர்களை மட்டும் அல்ல, சிறியவர்களையும் மதிக்க கற்றுக்கொடுங்கள்!
Image Source: pexels-com
குழந்தைகள் முன் பெற்றோர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் குழந்தைகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்கும். எனவே, எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்னரும் - பல முறை சிந்திப்பது நல்லது!
Image Source: pexels-com
உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது (அ) நடத்துவது நல்லது அல்ல. பெற்றோர் - குழந்தை இடையே உள்ள உறவை இது பாதிப்பதோடு, குழந்தைகளின் வளர்ச்சியையும் இது பாதிக்கும்!
Image Source: pexels-com
Thanks For Reading!