[ad_1] நாகர்கோவில் ஸ்பெஷல் 'முந்திரி கொத்து' செய்வது எப்படி?

May 7, 2024

BY: Anoj

நாகர்கோவில் ஸ்பெஷல் 'முந்திரி கொத்து' செய்வது எப்படி?

முந்திரி கொத்து

நாகர்கோவிலில் முந்திரி கொத்து மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசையாக வாங்கி சாப்பிடுவார்கள். அதை சுவை மாறாமல் நாகர்கோவில் ஸ்டைலில் எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/mayu_kitchen

தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு - 2 கப்; வெல்லம் - 2 கப்; அரிசி மாவு - 1 கப்; தேங்காய் துருவல் - அரை கப்; மைதா மாவு - 2 டீஸ்பூன்; ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்; எள் - 1 டீஸ்பூன்; மஞ்சள் - அரை டீஸ்பூன்; நெய் - 3 டீஸ்பூன்; உப்பு - தேவைக்கேற்ப; எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி -1

முதலில் கடாயில் வெறுமனே பாசிப்பயிரை சேர்த்து லேசாக வறுத்து ஆறவிட வேண்டும். பின் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து, தனி தட்டிற்கு மாற்றவும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்து அப்படியே வைத்திருக்கவும்

Image Source: istock

செய்முறை படி - 2

மீண்டும் கடாயில் எண்ணெய் விடாமல் தேங்காய் துருவல் மற்றும் எள் சேர்த்து வறுத்து தனியாக வைத்துவிடவும். பிறகு, அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து பாகு தயார் செய்ய வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 3

பாகை வடிகட்டி தனி பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். அதில் அரைத்த பாசிப்பருப்பு கலவை மற்றும் வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவல் கலவையை சேர்க்க வேண்டும். கொஞ்சமாக நெய் விட்டு நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 4

பிறகு கையில் லேசாக நெய் தடவி, சூடாக பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ள வேண்டும். அவற்றை சுமார் அரை மணி நேரமாக ஊறவிட வேண்டும்

Image Source: instagram-com/nacha_conscious_evolution

செய்முறை படி - 5

இதற்கிடையில், ஒரு பவுலில், மைதா, அரிசி மாவு, மஞ்சள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலவையை கொண்டு வர வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 6

இப்போது, அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை மைதா மாவு கலவையில் நன்றாக மிக்ஸ் செய்து எண்ணெயில் போட வேண்டும்

Image Source: instagram-com/kanyakumari_magazine

டேஸ்டி முந்திரி கொத்து ரெடி

கலவையை பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான நாகர்கோவில் பேமஸ் முந்திரி கொத்து ரெடி. இதை வீட்டில் இருப்போருக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக ரெடி செய்து தரலாம்

Image Source: instagram-com/justforthespices

Thanks For Reading!

Next: பால் இல்லாமல் கெட்டியான 'தயிர்' செய்வது எப்படி?

[ad_2]