Aug 19, 2024
நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கும் நபர்கள் எதிர்கொள்ளும் ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன? காத்திருக்கும் ஆபத்துக்கள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
நாள் ஒன்றுக்கு 10 - 12 மணி நேரம் வேலை செய்யும் நபர்களுக்கு மன அழுத்தம், தமனி அடைப்பு - இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!
Image Source: istock
நீடித்த உழைப்பு என்பது ஆற்றல் மீட்டெடுப்பிற்கான வாய்ப்பை குறைக்கிறது. மேலும், அட்ரினலின் அவசியத்தை தூண்டி மன அழுத்தம் - மன அழுத்தத்துடுடன் தொடர்புடைய இரத்த அழுத்தம், அதிகரித்த இதய துடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது!
Image Source: istock
நாள் ஒன்றுக்கு 10- 12 மணி நேரத்தை பணிக்கு ஒதுக்குவதோடு, அலுவலக பயணங்கள், குடும்பத்திற்கான நேரம் என தனிப்பட்ட ஆரோக்கியம் மற்றும் ஓய்வுக்கான அவகாசம் குறைகிறது. இது, நம் உடல் ஆரோக்கியத்தில் பெருமளவு தாக்கத்தை உண்டாக்குகிறது!
Image Source: istock
உடல் இயக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பணியை செய்பவரை காட்டிலும், உடல் இயக்கத்தை குறைத்து கணினி முன் அதிக நேரத்தை செலவிடும் தொழில்நுட்ப ஊழியர்களையே இந்த பிரச்சனை குறிவைத்து தாக்குகிறது!
Image Source: pexels-com
நீண்ட நேரத்திற்கு உழைப்பது இதய ஆரோக்கியத்தை மட்டும் பாதிப்பதில்லை. இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய நீரிழிவு பிரச்சனை, கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடு அளவுகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்குகிறது!
Image Source: istock
நீடித்த பணி நேரம் காணமாக அதிகரிக்கும் மன அழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன் மாற்றங்கள், உடலில் கூடுதல் கொழுப்பு தேக்கத்தை அதிகரித்து - உடல் பருமன் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது!
Image Source: istock
நீடித்த பணி நேரம் காரணமாக உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்க பலரும் சிகரெட், மதுவின் உதவியை நாடும் நிலையில் - குறிப்பிட்ட இந்த போதை வஸ்துக்களும் இதய ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!
Image Source: istock
பணி நேரத்தை குறைக்க இயலாமல் கட்டாயம் 10 -12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பணிக்கு இடையில் போதுமான உடல் இயக்கத்தை உறுதி செய்யுங்கள். மேலும், தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய உணவு வழக்கத்தை கடைபிடியுங்கள்!
Image Source: istock
Thanks For Reading!