Jul 9, 2024
நாவல் பழம் சீசன் என்றாலே பலருக்கும் ஆனந்தம் தான். தினமும் இப்பழங்களை வாங்கி சாப்பிடும் பழக்கம் நம்முள் பலருக்கு உண்டு. இந்நிலையில் இந்த நாவல் பழங்களை யார் யார் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை தான் இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.
Image Source: istock
ஒரு நாளைக்கு குழந்தைகள் 50 கிராம் முதல் 75 கிராம் வரை அளவிலான நாவல் பழங்களை சாப்பிடலாம்.
Image Source: pixabay
குழந்தைகளுக்கு நாவல் பழம் சாப்பிடுவதால் எதாவது ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை கண்காணிப்பது அவசியம். அப்படி தென்பட்டால் நாவல் பழங்களை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.
Image Source: istock
குழந்தைகளை தவிர்த்து மற்ற நபர்கள் ஒரு நாளைக்கு சுமார் 100 கிராம் முதல் 150 கிராம் வரை எடைகொண்ட நாவல் பழங்களை சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Image Source: pixabay
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாவல் பழங்களை தினமும் 50 கிராம் முதல் 100 கிராம் வரை சாப்பிடலாம்.
Image Source: pixabay
நாவல் பழங்களுக்கு ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவினை குறைக்கவும், சரியான சர்க்கரை அளவினை நிர்வகிக்கும் தன்மையும் உள்ளது.
Image Source: istock
நாவல் பழங்களை சிறுநீரக பிரச்சனை, இரைப்பை குடல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதிலுள்ள ஆக்சலேட்டுகள் சிறுநீரக கற்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை மேலும் தீவிரப்படுத்திவிடக்கூடும்.
Image Source: Samayam Tamil
இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட நாவல்பழங்களில் இரும்புசத்து, வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடெண்ட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
Image Source: istock
நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் நாவல் பழத்திற்கு உண்டு. மேலும் இது சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனினும், உடல் உபாதைகள் உள்ளோர் மருத்துவர்கள் பரிந்துரைப்படி இப்பழத்தை சாப்பிடுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!