Jun 17, 2024
நாவல் பழம் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பது போலவே, நாவல் பழ இலைகளும் ஆரோக்கியத்திற்கு சிறந்த பலன்களை தருகிறது. அதை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: istock
நாவல் பழ இலைகளில் இயற்கையாகவே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளன. அதிலுள்ள ஆல்கலாய்டுகள் போன்ற கலவைகள், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன. மேலும், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது
Image Source: pexels-com
நாவல் பழ இலைகள் செரிமான மண்டலத்திற்கு பயனுள்ள தீர்வாகும். அதன் astringent பண்புகள், வயிற்றுப்போக்கு போன்ற பொதுவமான செரிமான பிரச்சனைகளை தடுக்கக்கூடும். மேலும், சீரான குடல் இயக்கத்திற்கு வழிவகுக்கும்
Image Source: istock
இந்த இலையின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், வாய் ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது. அதனை வாயில் போட்டு மென்னுவது, ஈறு வீக்கம், வாய் துர்நாற்றம், வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளை தடுக்கக்கூடும்.
Image Source: istock
நாவல் பழ இலைகள் பசியை குறைத்து ஆரோக்கியமான உடல் எடைக்கு வழிவகுக்கிறது. அதிலுள்ள கலவைகள், உடலில் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து கலோரி எரிப்பை வேகப்படுத்த செய்கிறது
Image Source: istock
இந்த இலைகளில் வலுவான ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளது. அவை ஃப்ரீ ரேடிக்கல் தாக்குதலை தடுத்து செல்களை சேதங்களில் இருந்து பாதுகாக்க செய்கிறது. இதன் மூலம், முன்கூட்டியே வயதாகுதல் மற்றும் நாள்பட்ட நோய் அபாயங்கள் தடுக்கக்கூடும்
Image Source: istock
நாவல் பழ இலைகள் அழற்சி எதிர்ப்பு பண்புக்காக அறியப்படுகிறது. அதனை மென்று சாப்பிடுவது, ஆர்த்ரிடிஸ் மற்றும் அழற்சி குடல் நோய்கள் போன்ற நிலைகளால் பாதிக்கப்பட்டவருக்கு நிச்சயம் உதவியாக இருக்கக்கூடும்
Image Source: istock
நாவல் பழ இலைகள் சரும ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடும். அதனை மென்று சாப்பிடுவது அல்லது பேஸ் பேக்காக ரெடி செய்து சருமத்தில் தடவுவது, சுருக்கம் மற்றும் கோடுகளை போக்கக்கூடும். அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், முகப்பருக்களை சிகிச்சை அளிக்க்ககூடும்
Image Source: istock
இந்த இலையில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படுவது குறையக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!