[ad_1] நிமோனியா காய்ச்சலில் இருந்து மீண்டு வர உதவும் உணவுகள்!

May 7, 2024

நிமோனியா காய்ச்சலில் இருந்து மீண்டு வர உதவும் உணவுகள்!

mukesh M

நிமோனியா என்றால்?

நுரையீரலில் ஏற்படும் ஒரு வகை தொற்றினை நிமோனியா காய்ச்சல் என்கிறோம். பல வகை ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் இந்த நிமோனியா காய்ச்சலில் இருந்து மீண்டு வர உதவும் உணவுகள் பற்றி இங்கு காணலாம்!

Image Source: istock

ஆரஞ்சு!

ஆரஞ்சில் நிறைந்துள்ள வைட்டமின் சி ஒரு ஆன்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நிமோனியா போன்ற நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. வாய்ப்புண் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்க்கவும்.

Image Source: istock

சிறுதானிய உணவுகள்

ஓட்ஸ், பிரவுன் ரைஸ் போன்ற கார்போஹைட்ரேட்கள் நிறைந்த முழு தானிய உணவுகள் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதில் நமது உடல் வெப்பநிலையை நிர்வகிக்க உதவும் வைட்டமின் பி மற்றும் செலினியம் நிறைந்துள்ளதால் சளி, இருமல் போன்ற தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

Image Source: istock

தேன்

பல நன்மைகளைக் கொண்ட ஒரு பொருள் என்றால் அது தேன். சளி, இருமல் போன்ற தொற்றுகளை சரி செய்ய பழங்காலத்தில் இருந்தே தேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது உணவில் தேனை சேர்த்துக் கொள்ளலாம்.

Image Source: pexels-com

தயிர்

தயிரில் நிமோனியா போன்ற தொற்றுக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் நுண்ணுயிரிகள் உள்ளன. நிமோனியாவை நிர்வகிக்க உங்களது உணவுகளில் தயிரை சேர்த்துக் கொள்ளலாம்.

Image Source: istock

இஞ்சி

அனைத்து சுவாசப் பிரச்சினை உள்ளவர்களும் இஞ்சியை தங்களது உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சியில் நிரம்பியுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாசப் பிரச்சனைகளை எளிதாக்க உதவுகிறது.

Image Source: istock

காபி

பால் சேர்க்கப்படாத காபி மூச்சு திணறல் போன்ற சுவாசப் பிரச்சினைகளை சரி செய்ய உதவும். எனவே நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் காபியை தங்களது உணவில் அளவாக சேர்த்துக் கொள்ளலாம்.

Image Source: istock

மீன்

மீனில் அதிக அளவு புரதச்சத்து நிரம்பி உள்ளதால் நிமோனியா போன்ற தொற்றுக்களை நிர்வகிப்பதில் இது உதவுகிறது. மேலும் இதில் ஒமேகா 3 மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளதால் நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

Image Source: istock

எலுமிச்சை

எலுமிச்சையும் ஆரஞ்சு போலவே வைட்டமின் சி நிறைந்த ஒன்று. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி நிமோனியா போன்ற தொற்றுக்களை நிர்வகிப்பதில் உதவுகிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: நீந்துவதற்கு முன் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

[ad_2]